வறட்சி

கேணியில் நீர் வற்றிப்போனது
ஆழ்துளைக்கிணற்றிலும் நீர்
கீழ் நோக்கி போக பம்பு கொண்டு
நீர் இறைக்க நீர் சொட்டுது
அதுவும் போய் வெறும் காற்று வருகுது
வறண்டு போன வாய்க்கால்,
குளங்கள், குட்டைகள், பாவம்
தண்ணீர் தண்ணீர் என்று
ஏங்கி எங்கெங்கோ ஓடும்
பாமர மக்கள் பாட்டாளிகள் குடியானவர்கள்
இப்படியே நீடித்தால் வறட்சி
முழுமையாய் நம்மை தாக்கிடுமா என்னும் பீதி
இன்னும் நேற்றே நீரைத்தேக்கி வைத்திருந்தால்
வீணாக கடலுக்கு போகாமல்
ஓரளவுக்கு நிலைமை கட்டுக்குள் அடங்கியிருக்கும்
வள்ளுவன் சொன்னது நினைவுக்கு வந்தது
"வருமுன்னர் காவாதான் வாழ்க்கை
ஏறி முன்னர் வைத்தூறுபோல கெடும் :"
மனதை தளரவிடல் வேண்டாம்
மாமழை பெய்திடும் நம்புவோம்
தளர்ந்திடாமல் நம்பிக்கையில்
முன்னேறிடுவோம் .............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Apr-17, 1:26 pm)
Tanglish : varatchi
பார்வை : 122

மேலே