பதினைந்தாம் நிலவு

அவள் பருவ வானத்தின்
பதினைந்தாம் நிலவு
அப்சரஸ் மாளிகையின்
கஜுரோகா வாயில்
அழகியர் அந்தப்புர
மாடத்தை அலங்கரிக்கும்
சீகிரியாக் கன்னி
இளமைச் செடியில்
பறிக்காத சிவப்பு ரோஜா
இயற்கையாய்ப் பழுத்த
இனிப்புப் பப்பாளி

இருப்பிடமின்றி அலைந்த
இரட்டை முயல்களை
இதயத்தில் இருத்தி
அழகு பார்த்தாள்
ஜீவகாருண்யம் மிக்க
திரண்ட மனசுக்காரி

நடன அசைவு தந்தாள்
செதுக்கி வைத்த
வெள்ளிடையில்
இருந்து வீசிய
பனிக்காற்று
என்னில் விசிறியடித்தது
திசை நோக்கினேன்
கற்கண்டு கண்களால்
எனக்கு பாணம் விட்டாள்
கூட்டுக்குள் இருந்து
வெளிப்பட்ட என்னிதயம்
கட்டாந்தரையில்
அவளருகே சுருண்டு வீழ்ந்தது

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (29-Apr-17, 4:27 pm)
பார்வை : 77

மேலே