உயிர் நீர்

அருவியில் உருகிடும் நீரினிலே
ஆடிப் பாடிக் குளிப்பதிலும்,
உருவினில் பெரிய அலைகடலின்
உப்பு நீரில் குளிப்பதிலும்,
அருகினில் ஆறு குளங்களெனும்
ஆயிரம் தீர்த்தம் அமிழ்வதிலும்,
பெருமை மிக்கது நம்வயலில்
பாயும் நீரில் குளிப்பதுவே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Apr-17, 7:18 pm)
Tanglish : uyir neer
பார்வை : 68

மேலே