சிகரத்தை வளைக்கப் பிறந்தவன்

சிகரத்தை வளைக்கப் பிறந்தவன்!
இளைஞனே, நீ
சிகரத்தை வளைக்கப் பிறந்தவன்!
சிணுங்கிக் கொண்டு இருப்பது,
சீர் கேட்டில் முடியும், மனித இனத்திற்கு!

குறிக்கோள் இல்லா வாழ்க்கை, குறையுள்ள வாழ்க்கை!
வகுத்துக்கொள், உனக்கென குறிக்கோள் ஒன்றை!
புறப்படு, குறிக்கோள் நோக்கி!

உன்வழி தனிவழியாக இருக்கலாம், தப்பில்லை.
ஆனால், நேர் வழியாகவும், நேர்மையான வழியாகவும்,
உயிர்களுக்கு பயன்தரும் வழியாகவும் இருக்கட்டும்!

குறிக்கோளை அடையும் வரை, தியானம் மேற்க்கொள்!
அது பிறர் கண்ணுக்கு, தூங்குவது போல் தெரியும்.
உண்மையில், நீ அவர்களைத் தூங்க வைக்கிறாய்.
அவர்கள் கொடுக்கும் தொந்தரவுகளிலிருந்து,
உன்னை காப்பாற்றிக் கொள்ள!

நீ சிகரத்தை வளைத்ததும், அவர்களும் வருவார்கள்,
உன்னை வளைக்க, குடை பிடித்துக்கொண்டு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (30-Apr-17, 6:57 pm)
பார்வை : 107

மேலே