வண்ணமிகு வானரமே

வண்ணமிகு வானரமே வாடியதேன் உன்வதனம்
வெண்பாவில் தாலாட்டு வேண்டுமோ ? - எண்ணற்ற
பாவலர்கள் கண்ணில்நீ பட்டுவிட்டால் பாடிடுவார்
ஆவலுடன் சேர்ந்துநீ ஆடு .

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-May-17, 12:42 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 64

மேலே