கல்வி---வஞ்சி விருத்தம்

வஞ்சி விருத்தம் :

கலைவாணி யாலயத்தின் கதவிங்கே
வுலையரிசி யீந்தருளும் உழவர்க்கும்
வலையின்றி மீன்பிடிக்கும் வறியோர்க்கும்
அலைமகளின் ஆசியின்றேல் அடைத்திருக்கும்......

நிலையற்றப் புவிநிற்கும் நற்கல்வி
விலையாகி வாளேந்தும் வேதனையாற்
றலையற்றுத் தவிக்குமுடற் றரணியின்று
சிலையாய்நீ யிருப்பதேனோ?... சிவசக்தி......


வாய்ப்பாடு :

காய் காய் காய்

எழுதியவர் : இதயம் விஜய் (1-May-17, 9:42 am)
பார்வை : 1799

மேலே