மே தினம் அல்ல - இனி மேதகு தினம்

உழைப்பாளி - அவன்
வியர்வைக்கு
விலாசம்
வைப்பவன் ....

உழைப்பாளி - அவன்
கடமையை
கருவை போல்
சுமப்பவன் ...

உழைப்பாளி - அவன்
தொழிலை
தூய்மையுடன்
தொழுபவன் ...

உழைப்பாளி - அவன்
முயற்சிக்கு
முன்னுரிமை
தருபவன் ...

உழைப்பாளி - அவன்
உழைப்பிற்கு
உறைவிடம்
இடுபவன் ...

உழைப்பாளிகளின் தினம் - அது
மே தினம் அல்ல - இனி
மேதகு தினம் ....

எழுதியவர் : சரவணக்குமார்.சு (2-May-17, 11:24 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 150

மேலே