ஒரு குழப்பமும் ஒரு தெளிவுமாய்

கடந்த நாட்களை
புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்க
விளங்கவில்லை ஒன்றும்
மரத்தடியில் இருந்த ஒரு வயதான
பைத்தியக்காரனின் புலம்பல் ஒலி கேட்கிறது
அருகில் சென்றேன்
ஏதோ ஓதினான்
மந்திரமும் இல்லை தந்திரமும் இல்லை
அந்த மரத்தடியில் உதிர்ந்ததென்னவோ
சராசரி வார்த்தைகள் தான்
ஏதோ புரிந்தது போல
தலையாட்டி நகர்கிறேன்

நியூட்டனின் தலையில் ஒரு ஆப்பிளும்
புத்தனின் தலையில் அந்த ஞானமும்
விழந்த போது எப்படி இருந்திருக்குமோ?
தெரியாது
ஆனால் இரண்டும் சேர்ந்து விழுந்தது போல
புரிந்தும் புரியாது நகர்கிறேன்
ஒரு குழப்பமும் ஒரு தெளிவுமாய்

எழுதியவர் : கி. கவியரசன் (3-May-17, 11:54 am)
சேர்த்தது : கி கவியரசன்
பார்வை : 146

மேலே