கண்ணெதிரே தோனறினாள்

மீண்டும் ஒரு முறை தன் கைப்பையை தடவிகொண்டான் விக்னேஷ். கண்கள் அவனை அறியாமல் நீரை சொரிந்தன. மனதிலே குடிகொண்ட காயத்துக்கு மருந்து இல்லாமல் அவன் தன்னையே புண்ணாக்கி கொண்டிருந்தான்.
'' என்னடா மச்சான் ! இன்னும் அவ நெனப்பா?" சுகனின் கேள்வி காற்றிலே மறைந்தது. " அப்படி என்னதான் இந்த பய்ல மறைச்சி வெச்சி இருக்குற? மீண்டும் சுகனின் கேள்வி காற்றுக்குள் மறைந்தது. விக்னேஷ் எண்ணங்களுக்குள் கட்டு பட்டு பழைய நினைவுக்குள் மறைந்தான்.
"ரோஜா ரோஜா ... கண்ட பின்னே .....! செல்போன் சிணுங்களுக்கு கலைப்பட்ட உறக்கம் மீண்டும் வரவே மறுத்தது. வ்ரோங் நம்பர் என்றாலும் பேசிய குரல் தூக்கத்தை கலைத்து உடைந்த ரெகார்ட் போல மீண்டும் மீண்டும் காதுக்குள் ஒலித்தது. " கவி நாளக்கி என் பிறந்த நாளுக்கு வருவ இல்ல? " விக்னேஷ் தூக்க கலக்கத்தில் " கவியா? நீங்க ?" நான் நித்தி " சாரி வ்ரோங் நம்பர் என்று அழைப்பு துண்டிக்கப்பட்டது . நித்தி அழகான பெயர் தான் என்று எண்ணியவனுக்கு மீண்டும் தூக்கம் வர மறுக்கவே " பாட்டி காபி ரெடியா ? என்றவாறே பாட்டியிடம் சென்றான். வா விக்கி! சுட சுட காபி ! பல்லு துலக்காம குடி ! என்று கடிந்தாள்.
இல்ல பாட்டிமா பல் துலக்கினா பெட் கோபி குடிக்க முடியாதே என்று காபியே உரிஞ்சான்.
காபீயை உறிஞ்சியவனின் எண்ணங்கள் மீண்டும் நித்தியிடமே சென்று தஞ்சம் புகுந்தன. நித்தி... முழுப்பெயர் என்னவா இருக்கும் என்று கற்பனை உலகில் சஞ்சரித்தவனை பாட்டியின் சுடக்கு சுய நினைவிற்கு கொண்டு வந்தது.'' என்ன விக்கி நின்னுக்கிட்டே கனவு காணுற? லவ்வு கிவ்வு பண்ணுறாயா?'' என்றாள்
லவ்வா நானா பாட்டிமா சேச்சே இல்லவே இல்ல, என் நண்பனுக்கு பிறந்த நாள் அது தான் என்ன கிப்ட் வாங்கலாம் என்று யோசிச்சேன் என்று மழுப்பினான்.
அட உன் பிரெண்ட்க்கும் நாளக்கா பிறந்த நாள் என் பிரென்ட் பவானிக்கும் நாளைக்கி தான் பிறந்த நாள் அவக்கும் நான் ஒரு கிப்ட் வாங்கணும் நீயே வாங்கிட்டு வா'' என்றாள். லேடிஸ்க்கு கிப்ட் வாங்குறது ஒரு சவால் பாட்டிமா சொல்லு என்ன வாங்கணும்?
ம்ம்ம் ஒரு அழகான சேலை வாங்கிட்டு வாடா சேலைல அவ மஹா லட்சுமி போல இருப்பா''
அடடா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ண புகழறத இன்னக்கி தான் கேட்டிருக்கேன். ஓகே பாட்டிமா நான் வாங்கிட்டு வாரேன் என்று இடத்தை காலி பண்ணியவனின் கைகள் அவனை அறியாமல் செல்போனில் நித்தி என்ற பெயரை தொட்டது. நித்தி பெயரே தித்திக்குதே என்று சேலை வாங்க சென்றவன் பாட்டிமா வின் நண்பிக்கு அழகான பட்டு புடவை ஒன்று வாங்கினான்.. அங்கு அடுக்கி வைக்கப்பட்ட சேலை கட்டில் தெரிந்த இளம் நீல பட்டு அவன் கண்ணை கவர முகம் தெரியா நித்தி மனக்கண்ணில் வந்து நின்றாள். சரி என்று அந்த சேலையையும் வாங்கி வீட்டிற்கு சென்றவன் பாட்டிமாவின் கண்களுக்கு தெரியாமல் சேலையை மறைக்க செய்த முன்னேற்பாடு காலை வார பாட்டிமாவின் கழுகு கண்கள் இரு சேலையையும் கண்டு விட்டு என்ன விக்கி ரெண்டு சேலை வாங்கி வந்திருக்க மத்தது யாருக்கு என்று ஏவுகணையை வீச '' உனக்கு தான் பாட்டிமா என்று மழுப்பினான். அட இந்த நீல சேலை என் பவானிக்கு சூப்பரா இருக்கும் என்று சேலையை வாங்கினாள். கண்முன்னே கனவு கலைய விக்கி விக்கித்து நின்றான்.

விக்னேஷ் மனதில் புதிதாய் மலர்ந்த காதல் அவனை சிந்தனையில் ஆழ்த்தியது. ஒரு வ்ரோங் கால் அதுவும் பெயர் கூட தெரியாத பெண் மேல ஏன் இப்பிடி ஒரு உணர்வு? சரி அவ யாருனு ஒரு மெசேஜ் குடுத்து தான் பாப்போம். ஹாய்! பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள் ! இப்படிக்கு வ்ரோங் கால் என்று நடுநிசி 12 மணிக்கு வாழ்த்து தெரிவித்தான் விக்கி. தேங்க்ஸ் விக்கி என்று உடனே ரிப்ளை வர விக்னேஷ் ஆடி போனான் ஏன் பேரு எப்பிடி தெரியும்?
ஹலோ நீங்க யாரு எப்பிடி ஏன் பேரு தெரியும்?
ம்ம்ம்ம் எனக்கு உங்கள நல்லாவே தெரியும் பட் என்னய்யா உங்களுக்கு தெரியாது ! ஓகே விக்கி நாளை ஏன் birthday பார்ட்டி சோ நெறய வேலை இருக்கு குட் நைட் .... என்று callலை கட் செய்தாள். விக்கி சிறிது நேரம் சிந்தித்தான் யாரா இருப்பா? என்னய்யா எப்பிடி தெரியும். விக்கிக்கு இன்றும் சிவா ராத்திரி தான் தூங்காமல் புரண்டு புரண்டு யோசித்தான். அவனை அறியாமல் கண் மூடிய வேலை பாட்டியம்மா டேய் விக்கி மணி பத்து எழுந்திரு இன்னக்கி பவானிட பிறந்த நாள் சோ நான் போஹகனம். காபி டம்ளர்ல இருக்கு குடி. டிபன் இட்லி செஞ்சி வெச்சிருக்கேன் சாப்பிடு கண்ணா. நான் தான் பவானிக்கு சாரி கட்டி விடனும். உன் சாய்ஸ் சாரி தான் ஓகே பை .. என்று இவனை பேச விடாமல் பாட்டியம்மா சென்று கொண்டிருந்தாள். தூக்க கலக்கத்தில் விக்கி ஏன் சாய்ஸ் சாரி .. என்று அப்பாவியாய் விழித்தான்.
விக்கி நான்கு தடவை நித்தியுடன் பேச முயற்சித்தான் ஆனால் நம்பர் பிஸி என்றே வந்தது. யாரு இவ? எதுக்கு என்ன வெச்சி விளயாடறா? யோசித்து யோசித்தே குழம்பி போனான் விக்கி. இப்படி துடங்கிய விக்கியின் மனப்போராட்டம் கடைசியில் நித்தியுடன் காதலில் முடிந்தது. இதற்கிடையில் எப்பப்பா கல்யாணம் பண்ணிக்க போற என்ற பாட்டிமாவின் நச்சரிப்பு ஒரு பக்கம் முழுப்பெயர் சொந்த இடம் கூறாமல் விழையாடும் நித்தி ஒரு புறம் என விக்னேஷ் நடுவில் மாட்டி கொண்டு விழித்தான். என்ன சொன்னாலும் நித்தியுடன் தொடங்கிய காதல் நாளுக்கு நாள் கூடியதே தவிர குறைந்த பாடில்லை. பெற்றோரின் விபத்துக்கு பின் பாட்டியே உறவான நித்தி பாட்டியிடம் மறைத்த ஒரு விடயம் இந்த காதல் தான். எப்படியாவது நித்தியை பாட்டிக்கு அறிமுகம் படுத்தும் நோக்குடன் நித்தியுடன் கெஞ்சி கொஞ்சி இவர்கள் சந்திக்கும் நாள் குறித்தான் விக்கி.நித்தியிற்கு காதல் பரிசாக இவன் கூரியரில் அனுப்பிய இள நீல நிற கைப்பை தான் இவன் நித்தியை அடையாளம் காண போகும் பொக்கிஷம். நித்தியை பார்க்கும் நாள் வரவே மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதந்தான் விக்கி இனி அவன் வாழ்வே சூனியமாகும் என்பதை உணராமல்.....
கிறிஸ்துமஸ் முடிந்து அடுத்த நாள் நித்தியை பார்க்கும் ஆவலில் தன்னேயே மறந்தான் விக்கி.
பாட்டி மா பாட்டிமா.... எங்க போனீங்க ? என்றும் இல்லாமல் கட்டிலில் சாய்ந்திருந்த பாட்டியை பார்த்ததும் ஒரு நிமிடத்தில் விக்கி ஒன்றும் புரியாமல் திகைத்தான். பாட்டி மா என்னாச்சு? பதறிய விக்கியை பாட்டிமா மெதுவாய் தடவினால்
என்னமோ தெரியாது பா எனக்கு காலைல இருந்த கொஞ்சம் உடம்புக்கு முடியாத போல இருக்கு. கஷாயம் குடிச்சான் அதுவும் சரி படர மாதிரி இல்ல.. நீ எங்கயோ கிளம்பின மாறி இருக்கு என்றாள்.
அது இருக்கட்டும் பாட்டிமா வாங்க நாங்க டாக்டர் த போலாம் என்று பாட்டியின் கையை பற்றினான்.
இல்லப்பா டாக்டர் கிட்ட போக தேவல்ல. இன்னும் கொஞ்சத்துல சரியா போகும். நீ போப்பா ஏதாச்சும் முக்கியமான வேலையா இருக்கும். நான் என்ன பார்த்துக்கறேன். இல்ல பாட்டிமா உங்கள இப்படி விட்டுட்டு எண்ணெயால் போக முடியாது உங்களோட இருக்க யாரை சரி வர சொல்லணும். உங்க பிரென்ட் பவனிட சொல்லவா பாட்டிமா?
இல்ல இல்ல தேவால பா இன்னக்கி பவானிக்கு முக்கியமான வேல ஒன்னு இருக்கு நீ போப்பா. என்னெக்கி ஏன் பேத்தியை என் கிட்ட காட்ட போற? நான் கண் மூட முன்ன காட்டிருப்பா !
என்ன பாட்டிமா இப்படி பேசுறீங்க சரி உங்க வரும்கால பேத்தியை இன்னெக்கி காட்றேன் ஓகே வா? ஆனா உங்கள தனியா விட்டுட்டு போக எனக்கு மனசு இல்லையே பாட்டிமா..
ம்ம்ம் நீ காதலிக்குறானு எனக்கு தெரியும்.. ஆனா இன்னெக்கி காட்டுவனு எனக்கு தெரியாதேப்பா.. அது தான் பவானிக்கு முக்கியமான வேலையா?
என்ன பாட்டிமா இதுக்கும் பவானிக்கு என்ன சம்பந்தம் என்னென்னெமோ உளர்ர? உனக்கு இன்னக்கி என்னமோ சரில்ல வா டாக்டர் கிட்ட போய் வரலாம் என்றான்.
இல்ல பா எனக்கு ஒன்னும் இல்ல நீ போய் வா பக்கத்து வீட்டு பார்வதியை கொஞ்சம் வர சொல்லிட்டு போ பா என்றாள்
ஓகே பாட்டிமா ஒடம்ப பாத்துக்கோ அது சரி நான் காதலிக்கிற விஷயம் எப்பிடி உனக்கு தெரியும்?
ம்ம்ம் அது இல்லப்பா உன் கண்லயே புரியுது அது சரி இப்ப நீ கெளம்பு என் பேத்தி காத்துட்டு இருப்பா ! ஒங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாக்க தான் நான் காத்திருக்கேன்.
சரி பாட்டிமா கட்டாயமா நான் இன்னக்கி உன்க பேத்தியை காட்றேன்.

ஏய் விக்க்கி ! சுகனின் அழைப்பு விக்கியை உலகத்திற்கு கொண்டு வந்தது. என்னடா! நீ என்ன பைத்தியமா? இன்னம் கொஞ்ச நேரத்துல நீ உலகத்தையே விட்டு போயிருப்ப. பாரு லாரி வார வேகத்த. என்று நண்பனை இழுத்தான்.
யே டா என்னய்யா காப்பாத்தின? ஏன் நித்தியும் பாட்டிமாவும் போனதுக்கு அப்புறம் நான் யே உயிர் வாழறேன் என அழுதான். நண்பனை தேற்றும் முயற்சியில் தோற்க நண்பனை அழைத்து கொண்டு சுகன் பாதையை கடந்தான்.
இருளின் ஆட்சியில் மீண்டும் விக்னேஷ் பழைய காலத்திற்குள் புகுந்தான்.

பார்வதிகா பார்வதிகா ! பாட்டிமாக்கு என்னமோ உடம்புக்கு சரில்ல நான் கட்டாயமா வெளிய போக வேணும் கொஞ்சம் பாட்டிமாவ பாத்துக்கிறிங்களா?
ஹா சரி தம்பி நான் பாத்துக்குறேன். நீங்க போங்க.
மனதுக்குள் இனம் புரியா கணம் ஏறுவதை உணர்தான் விக்கி. இன்னம் ஒரு மணி நேரத்தில நித்திய காண போற மகிழ்ச்சியும் பாட்டிமாட திடீர் சுகவீனமும் அவனுக்கு இனம் புரியா ஒரு உணர்வை கொடுத்தது.
நித்தியை 9 மணிக்கு கடற்கரைக்கு வர சொன்னவன் இப்பொழுதே நேரம் 8.30 என்பதை உணர்ந்து பைக் வேகத்தை கூட்டினான். ரோஜா ரோஜா கண்டபின்.... செல்போனின் ரிங் டோன் வண்டியின் வேகத்தை குறைக்க ஹலோ என்றான்
தம்பி நான் பார்வதிகா பாட்டிமா சுய நினைவில்லாம விழுந்துட்டாக நான் பிரைவேட் ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன். அவசரமா வாங்க என்று கட் பண்ணினாள். பாட்டி மா ! நெஞ்சம் கலங்க அவசரமாக நித்திக்கு தொடர்பை ஏற்படுத்தினான். போன் சுவிட்ச் ஆப் என்றே வந்தது. பாட்டிமா சீரியஸ். என்று மெசேஜ் ஒன்றை குடுத்து விட்டு ஹாஸ்பிடல் நோக்கி வண்டியை செலுத்தினான் விக்கி.
ஹாஸ்பிடலில் சுய நினைவின்றி கிடைக்கும் பாட்டியை கண்டவுடன் விக்னேஷுக்கு ஒன்றும் புரிய வில்லை. பாட்டிக்கு என்னாச்சு? நான் பாட்டிக்கு காபி குடுக்க போறப்போ கொஞ்சம் தல சுத்துற மாறி இருக்குனாங்க தம்பி திடீர்ந்து விழுந்துட்டாங்க என்றால் பார்வதி. பெரிய டாக்டர் இப்ப வந்துருவாங்க என்னும் போதே தொலைக்காட்சியில் முக்கிய செய்தியாக கடற்கரையோரம் மதில் விழுந்து பெண் பலி! முகம் கை சிதைவு . நபர் யாரென்று இன்னும் அடையாளம் காணவில்லை என்ற அறிவிப்பை தொடர்ந்து இவன் பரிசளித்த நீல நிற கைப்பையும் செருப்பும் திரையில் தோன்றி மறைந்தன. நோ ..... நித்தி என்ற கதறலுடன் நிலத்தில் சாய்ந்தான் விக்கி. ஒன்றும் புரியாமல் பார்வதி தம்பி எழுந்துருக என்று அவனை தேற்ற முயற்சிக்கையில் பாட்டியின் கடைசி ஆசையாக விக்கியை பார்க்க ஆசைப்படுவதாக நர்ஸ் கூற வெளியே சொல்ல முடியா காயத்துடன் பாட்டியை பார்க்க சென்றான். பாட்டி மூச்சியை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே ஏதோ சொல்ல பார்த்தாள். அவளால் பேச முடியவில்லை. பவா..னி என்று ஏதோ சொல்ல பார்த்தவள் விக்கியின் கையை இருக்க பற்றி மூச்சையானாள். விக்கி ஹாஸ்ப்பிடலே வெடிக்கும் அளவு கதற தொடங்கினான். ஆறுதல் சொல்ல நண்பன் சுகன் மட்டுமே அருகில் இருந்தான்.
பாட்டியின் ஈமச்சடங்கில் பாட்டியுடன் அவனது செல்போனையும் தீயிற்கு இரையாக்கினான்.
கண்ணீரின் மொத்த ரூபமாய் திரிந்தவனை சுகன் தனது கிராமத்துக்கு அழைத்து வந்தான். நித்தியை பற்றி வேறெந்த தகவலும் தெரியாதலால் மறைந்த நித்தியின் மறவா நினைவுடன் வாழ்ந்தான்.
டேய் விக்கி இன்னக்கி ஆபீஸ்ல முக்கியமான வேலையா கொழும்பு போகணும். ஆனா உன்னைய அழைச்சுண்டு போக மனசு இல்ல. உன் பழைய நினைவுகளை கொழும்பு பயணம் மீட்டிடுமோனு பயமா இருக்கு என்றான் சுகன். இல்ல சுகன் நானும் கொழும்புக்கு போகணும் ஏ பாட்டிமா, நித்தியோட மானசீகமா பேசணும் நானும் வாறென்டா... மீண்டும் தன் வாழ்வில் வசந்தம் தொடர போவதை அறியாமல் கண்ணீரை துடைத்துக்கொண்டான் விக்கி.
கொழும்புக்கு வந்த நாளில் இருந்து பாட்டியின் நண்பி பவானியின் விலாசத்தை தேடி கொண்டிருந்தான் விக்கி. பாட்டி கடைசியா கூட பவானிட பெயரை சொன்னாங்க சுகன். சோ நான் கட்டாயமா பவானி பாட்டியை சந்திக்கணும். இது வர அவங்கள கண்டது இல்ல. எங்கட வீட்டுக்கும் வந்திருந்தாங்க . ஆனா நான் வீட்ல இருக்கல்ல பாட்டிமா தான் சொன்னாங்க. எதுக்கும் பார்வதியாக்க வீட்ல பாட்டிட பழைய பெட்டி இருக்கு ஒரு வேல பவானி பாட்டிட போன் நம்பர் கிடைச்சா அவங்களோட பேசி பாக்கலாம் என்றான் விக்கி. ஓகே விக்கி பார்க்கலாம் என்றான் சுகன்.
பார்வதி குடுத்த பெட்டியை திறந்தவனுக்கு பாட்டியின் பொருட்களை பார்க்கையில் கண்களில் நீர் கசிந்தது. மூடி வைக்கப்பட்ட பெட்டியில் கரையான் தனது வேலையை காட்டியிருந்தது . ஒவ்வொரு பொருளாய் மெதுவாக தேடியவனுக்கு கையில் ஒரு புகைப்படம் கிடைத்தது. மங்கலாக தெரிந்த பாட்டியின் படத்துக்கு அருகில் இருந்த இளம் பெண்ணின் முகம் கரையானால் சிதைக்கப்பட்டிருந்தது.. படத்திற்கு பின் N பவானி ஈசுவரி என்றிருந்தது. பவானி பாட்டியை தேடியவனுக்கு பவானி பாட்டி இல்லை என்று தெரிந்ததும் அவளை காணும் ஆவல் மறைந்தது. ஆனால் இவன் நித்தி நினைவாய் வாங்கிய இளம் நீல புடவையில் பவானி முகம் இல்லா மகாலட்சுமி போல தான் காட்சியளித்தாள்.பாட்டி சொன்னது சரி தான் என எண்ணியவனின் கண்கள் மங்கிய தொலைபேசி எண்ணில் நிலைத்தது. ஆம் இவன் மறக்க நினைக்கும் மறவா எண் நித்தியின் தொலைபேசி எண் புகைப்படத்திற்கு கீழ் இருந்தது...
நித்தியின் தொலைபேசி எண்ணை பார்த்ததும் விக்னேஷ் ஒருகணம் உலகையே மறந்தான். இதயம் படபட என துடிக்க மனதில் இதுவரை புரியாமல் இருந்த புதிருக்கெல்லாம் விடை கிடைக்க புகைப்படத்தில் முகம் புதைத்து விசும்பினான். ஏதோ ஒரு நப்பாசையில் இவன் விரல்கள் மெல்ல நித்தியின் எண்ணை தொலைபேசியில் தட்டியது... ஆனால் போன் சுவிட்ச் ஆப் என்றே விழுந்தது.. செய்வது அறியாமல் சிதைந்து போன நித்தியின் முகத்தை வருடியவனின் தோள்களை ஆதரவாக தொட்டது நண்பன் சுகனின் கைகள்...
விக்னேஷின் தோள்களை ஆதரவாக தொட்ட சுகன், என்ன விக்கி! பவானி பாட்டியை பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா? என்று கேட்டான். விசும்பலுக்கு மத்தியில் தன் கையிலிருந்த புகைபடத்தை நீட்டினான் விக்கி .
என்ன விக்கி யாரு இது? பாட்டிமா பக்கத்துல ஒரு பொண்ணு? கண்களை இறுக மூடியவன் புகைப்படத்தின் பின்புறம் காட்டினான். N .பவானி என்றிருந்தது.. அடடே பவானி பாட்டி இல்லையா? இல்லை என்பது போல் தலையாட்டியவன் கண்ணீருக்கு மத்தியில் விக்னேஷ் மெதுவாய் சொன்னான் இது என் நித்தி நம்பர் ...
வாட்? அப்பிடின்னா நித்தியும் பவானியும் ஒருவரா? மைகோட்! பாட்டிமா தான் உன் நம்பர் நித்திக்கு குடுத்திருப்பாங்க! நண்பனின் இறுகிய முகத்தை பார்க்க முடியாமல் விக்கி உன் வாழ்க்கைல விதி ரொம்பவே விளையாடிரிச்சி என்ன தான் செய்ய அறிமுகம் ஆக முன்னமே நித்தி தொலைதூரம் போய்ட்டா. கவலைப்படாதே எங்க கைல ஒன்னும் இல்ல...என்று ஆறுதல் சொன்னான்.
சுகன்.. நான் நித்திய வர சொன்ன அதே கடற்கரைக்கு போகணும். அவள் பாதம் பதிச்ச மண்ல நான் கொஞ்சம் உறங்கணும் என்ன கூட்டிட்டு போவாயா? .ஆமோதிப்பதை போல் சுகன் தலையாட்டினான்.
விக்னேஷை அழைத்து கொண்டு கடற்கைக்கு சென்றான் சுகன். இந்த ஒருவருட காலத்தில் அலையயும் கடலையும் தவிர எல்லாமே மாறிப்போயிருந்தன. பாதுகாப்பு அரண், எச்சரிக்கை பலகை, நித்தியின் மறைவிற்கு பின் தான் இதெல்லாம் செய்யணுமா? மனம் கொந்தளிக்க யாரும் அற்ற ஒரு இடத்தில் சுகானும் விக்கியும் அமர்ந்தனர். இருவரும் எதுவும் பேசவில்லை. பேச தோன்றவும் இல்லை. இவர்களது மௌனத்தை கலைப்பது போல் அருகே இரண்டு சிறுமிகளின் மண்வீடு விளையாட்டு தொடங்கியிருந்தது.
விக்கி ஏதாவது சாப்புடுவோமா? எவ்வளவு நேரம் தான் கடலேயே வெறிச்சிட்டு இருப்ப? வா என்று வலுக்கட்டாயமாய் நண்பனை அழைத்து சென்ற சுகன் காலில் தட்டுப்பட்ட பையை எடுத்தான். இது யார்டாயோ பய் விக்கி மறந்துட்டு போயிருக்காங்க. என்று பையை திறந்தான். திறந்தவன் ஒருகணம் திகைத்தான் மறுகணம் சிரித்தான். டேய் விக்கி இங்க பாருடா என்று அந்த பையில் அடைக்கலமாகியிருந்த போட்டோவை காட்டினான். விக்கியின் பாட்டியின் பக்கத்தில் வசீகர புன்னகையோடு சிரித்தாள் நித்தி என்கிற நித்யபவானீஸ்வரி ... சுகனின் வரும்கால மனைவியாய் முடிசூட்ட காத்திருக்கும் ஈஸ்வரி... சுகனுக்கு ஒன்றும் புரியவில்லை..
நித்தி நித்தி என்று நித்தியின் புகை படத்தை பார்த்து கண்ணீர் சிந்தியவனை ஒன்றும் பேசாமல் தன் பைக்கில் ஏற்றிக்கொண்டு ஒரு வீட்டின் முன் நிப்பாட்டினான் சுகன். நித்தியின் புகைப்படத்தில் லயித்திருந்தவன். தெரியாத வீட்டின் முன் பைக் நிறுத்தப்பட்டதும் என்ன சுகன் எங்க கூட்டிட்டு வந்திருக்க? என்றான். ஏ அத்த வீடு தான் விக்கி வா.
ஹா ஓ மொறப்பொண்ணு ஈசுவரிய பாக்கவா?
ம்ம் ஆமா நீ வாயே உள்ளுக்கு. அத்தை! எங்க ஈஷ்வரி? உள்ளாலை இருக்கா சுகி. என்னப்பா திடீர்ந்து வந்திருக்க? சும்மா தான் அத்தை நான் ஸ்வேரியோட கொஞ்சம் பேசிட்டு வாறன் என்று உள்ளே சென்றவன் பத்து நிமிடத்திற்கு பிறகு வெளியே வந்தான். அவனை தொடர்ந்து இளம் நீல சேலையில் (விக்கியின் அன்பளிப்பு ) தேவதையாய் நித்யபவானீஷ்வரி வந்தாள். நித்தியை பார்த்த விக்கி தன் கண்களை நம்ப முடியாமல் நித்தி.... நீ? என்று சொல்வது அறியாது திகைத்தான். அத்தை இது என் பிரெண்டு விக்னேஷ். ஈஷ்வரி என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்காம இருந்ததற்கு காரணம் விக்கி தான். என்று அழைப்பில் தொடங்கியதிலிருந்து காவிரி பாட்டியின் மரணம் வரை தொடர்ந்தவன் இதுல கவலையான விஷயம் என்னான்னா நித்திட செல் திருட்டு போனது. கடற்கரையிலே நித்தியோட கூட வந்த கவிதா மதில் விழுந்து பலியானத தெரியாம நித்தி தான் செத்துட்டாண்டு இவளோ நாலா விக்கி நடைபிணமா இருந்தான். இங்க ஈஷ்வரி விக்னேஷ்க்கு என்ன ஆச்சுண்டு தெரியாம இவ்வளவு காலமா விக்னேஷ் வருவான் என்று காத்திருந்து, முடியாத கட்டத்துல என்ன கட்டிக்க சம்மதிச்ச. அது மட்டும் இல்ல காவிரி பாட்டி தான் விக்கிட நம்பர குடுத்து பாட்டிட அபிமான பேத்தி நித்திய தன் பேரனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்தாங்க..இவங்க விளையாட்டு தெரியாம விக்கி தவிக்க காலம் செஞ்ச கோலம் பாட்டி எதுவுமே நடக்க முன் கடவுள்ட போய் சேர்ந்துட்டாங்க. இனி பாட்டிட ஆசையை நீங்க தான் அத்தை நிறைவேற்றனம் என்று சுகன் முடிக்க.. ஈஷ்வரி என்கிற நித்ய பவானீஷ்வரி விக்னேஷை கண்களால் நோக்க எல்லாம் சுபமாக நிறைவேறியது.....
முற்றும்......

எழுதியவர் : மாஹிரா (5-May-17, 7:25 pm)
சேர்த்தது : மாஹிரா ஜைலப்தீன்
பார்வை : 599

மேலே