என்நிறை என்சொல்

மானுடம் மறைநின் மாற்றம் தனைநினை
கொடுவேங்கை புய்த்திடு சிறம் சிதைமொழி
எச்சிலை மேய்ந்த கற்சிலை தலைவனும்
அடிகவிழ் பாதம் தனைஏற் றவழ்ந்த மழலையாய்
அகபிரம்மம் செய்வினை செவ்வனே ஏற்றிடவே
ஹிந்தியம்! ஹிந்தியம்! ஜனகனமனவே!!!

ஞாலம் இயற்பினை ஈன்றதன் ஊழ்உரு
எண்ணிலா சொற்றொடர் விழைந்தநென் வம்சமே
இச்சை ஈதலாலன்றி உயிர்நீப்பின் கவரிமான்
செந்நிற குருதிகலந் ஓர்குண்டலம் மிதந்ததென்
போரினில் கரைந்தநென் பறைகுனமே - ஏற்றிடு
ஹிந்தியம்! ஹிந்தியம்! ஜனகனமனவே!!!

மிகாமன் தவறிடு பவளவாய் பாற்குடம்
மறுமை அழித்து ஆகம ஆற்றலின்கொள்
சூடமும் செம்பொண் கவர்ந்தொளி கண்கவர்
மெய்யுரை நொடிகரை ஓடிநின் கரைமறை
எண்ணிய ஏடுடை செவிமடு விதிநிலா
திணிப்பதோர் ஈடுபாடிலா தற்புகழ் தலைவர்
ஹிந்தியம்! ஹிந்தியம்! ஜனகனமனவே!!!

வஞ்சனை தான்தோன்றா மொழி!!!
விந்தியமும் பர்வதமும் ஆண்டதென்மொழி!!!
விழுவேன் சிறம்தாழ் என்மொழிபிழை காண்பினும்
விழைவேனே சிறம்கொணர் என்மொழி அழிநினை
ஹரியும் அரிமாவும் நானாய்!!!
ஹிந்தியம்! ஹிந்தியம்!! உன் நாயனம்!!!
தமிழ்! தமிழினம் !! என் உணர்வினம்!!!!!


என் பார்வையில் (விளக்கவுரை):
தலைப்பு: என்னுள் நிரம்பியிருக்கும் என் வார்த்தை!!!

மனிதன் இயற்கையொன்றிய மாற்றங்களை நினைத்து
பசிகொண்ட சிங்கத்தின் இறையாய் என்மொழி சிதைந்திட
எச்சிலை மேயும்கல் உள்ளம்கொண்ட தலைவனும்
தரையினில் தவழ்ந்திடும் குழந்தையாய்
தன்தவறுகளை ஏற்று முதல்வனிடம் மண்டியிட்டு
ஏற்றான் எல்லாமும் ஹிந்தியமாக!!!

உலகம் இயற்கையில் உருவாக்கிய உயிரினில்
பலவார்த்தைகளை உருவாக்கியது என் சமுதாயமே
ஆசையில்லாமல் ஒருமுடி உதிர்ந்தாலும் உயிர்நீக்கும் கவரிமான்போல
இரத்தத்தால் கரைந்த என்முன்னோரின் மிதக்கும்
போர்குனம் கறைந்துள்ளது என்றுசொல்லியும் - என்றாலும்
ஏற்றுக்கொள் ஹிந்தியத்தை என்று!!

கப்பல் தலைவன் தவறவிட்ட பவளம் கொண்ட கடல்குடமாய்
மறுபிறப்பு அழித்திடும் பழைய நூல்களாக
கற்பூர வெளிச்சம் காட்டும் பொன்னின் ஒளி கண்ணைகவர்ந்ததுபோல்
உண்மையின் வாசனை ஓடி கரையில் மறைந்ததுபோல்
தெரிந்த நூல்களின் பழமைதெரிந்தும் பழையததாய் நினைத்து
திணிக்கின்றார் தற்புகழ் கொண்ட தலைவர்
ஹிந்தியமென்று!!!

பொறாமையில்லா மொழி
உலகம் ஆண்ட மொழி
விழுவேன் தலைசாய்தது கீழே என் மொழியில் பிழையென்றால்
எடுப்பேன் தலையினை எம்மொழி அழிக்க நினைத்தால்
காப்பவன் ஹரியுமாய் அழிப்பவன் சிங்கமாய்!!!
ஹிந்தியம்! உன் பாடல்!
தமிழ்! தமிழம்!! என் உணர்வு!!!

எழுதியவர் : சிவக்குமார்.ந (6-May-17, 1:12 am)
சேர்த்தது : சிவக்குமார்
பார்வை : 331

மேலே