சொல்லும் பொருளும் 9 - ஏமம், சாமம்

'பாவலர் பயிலரங்கம்' வலைத்தளத்தில் கீழேயுள்ளபடி ஒரு குறட்பா எழுதினேன்; அதில் ஏமம் என்ற சொல்லுக்கு சரியான பொருள் தேடினேன்.

காமமும் மோகமும் காட்டும் வழியடைத்தால்
ஏமமென என்றும் இயம்பு! - - வ.க.கன்னியப்பன்

ஏமம்: 1. Delight, enjoyment, gratification; இன்பம், களிப்பு என்று வந்தது.

சொற்களில் ஒரு சொல்லிற்கு இடத்திற்குத் தகுந்தாற் போல பல பொருள் வருவதுண்டு. சொல்லில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் வேறுபடும். எனவே பேச்சு வழக்கிலுள்ள ஏமம், சாமம் என்ற இரண்டு சொற்களுக்குப் பொருள் காண்போம்.

ஏமம் 1
1. Delight, enjoyment, gratification; இன்பம் (திவா)
2. Jollity, mirth; களிப்பு (பிங்)
3. Imbecility, madness, bewilderment; உன்மத்தம் (திவா)
4. ஏமல்2. Perplexity; கலக்கம் (பிங்)
5. Safety; பத்திரம்.
6. Defense, protection, guard; காவல். எல்லா வுயிர்க்கு மேம மாகிய (புறநா 1, 11)
7. Sacred ashes; திருநீறு (பிங்)
8. Hoarded treasure; சேமநிதி
9. Curtain, screen; இடுதிரை

ஏமம் 2
யாமம்.
Night; இராபுறங்காட்டி லேமந்தோறு மழலாடுமே (தேவா. 965, 7)

ஏமம் 3

Gold; பொன். ஏம மீத்த வியல்பின னாகி (பெருங். வத்தவ. 1, 28)

ஏமம் 4
1. Guarded place; காவலையுடைய இடம். எழின்மணி விளக்கினேமம் போகி (பெருங். உஞ்சைக். 34, 2)
2. Strength; வலிமை (அக. நி)

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்ல(து) இல்லை வலி. 1131 நாணுத்துறவுரைத்தல்.

ஏமம் - அரண்; மடல் - பனைமடல்; வலி-வலிமை. காமம் - காதல், அன்பு

பரிமேலழகர் உரை: மகளிரோடு காமத்தை அனுபவித்துப் பின் அது பெறாது துன்புற்ற ஆடவர்க்கு பண்டும் ஏமமாய் வருகின்ற மடல் அல்லது இனி எனக்கு வலியாவதில்லை.

இரா சாரங்கபாணி உரை: காமத்தினால் உடல்வாடி உள்ளம் வருந்தினார்க்குப் பாதுகாப்பாக மடலேறுதல் அல்லது வேறு உறுதியான துணையில்லை.

சாமம் 1

1. A watch of 7 1/2 நாழிகை = 3 hours ;
7 1/2 நாழிகை கொண்ட கால அளவை. (பிங்)
2. Midnight; நடுச்சாமம்
3. Night; இரவு (பிங்)

சாமம் 2

1. சாமவேதம் (பிங்)
2. Vēdic chant; கானம் பண்ணப்படும் வேதச்செய்யுள்.
3. Policy of reconciliation as a means of dealing with enemy,
சதுர் விதோபாயங்களுள் சமாதான வார்த்தையாற் பகைவனைத் தன்வசமாக்கும் உபாயம். (சீவக. 747, உரை)

சாமம் 3

1. Green or dark-green color; பசுமை. (பிங்.)
2. Dark or black color; கருமை. சாயற் சாமத்திருமேணி (திவ் திருவாய், 8, 5, 1)
3. Cynodon grass; அறுகு (மலை)

சாமம் 4

Drought famine; பஞ்சம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-May-17, 3:08 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 556

சிறந்த கட்டுரைகள்

மேலே