காத்திருக்கும் அழகு

உன் உதடுகள் இரண்டும்.. பஞ்சாமிர்தம் செய்ய காத்திருக்கும் பேரிச்சை..

மீனுக்கே கண்தானம் செய்ய காத்திருக்கும் உன் கண்கள்..

மானுக்கே மாற்று சிகிச்சை செய்ய காத்திருக்கும் உன் தோல்கள்..

மயிலுக்கே இறகு கொடுக்க காத்திருக்கும் உன் கூந்தல்..

குயிலுக்கே குரல் கொடுக்க காத்திருக்கும் உன் குழல்..

தாழை மடலுக்கே செவி
கொடுக்க காத்திருக்கின்றாய்...

எழுதியவர் : மணிபாலன் (8-May-17, 9:48 pm)
பார்வை : 1515

மேலே