இந்த வார ராசிபலன்

ஏமாற்றுபவர்கள்
ஏற்றம் காணும் வாரம்...

கறைவேட்டி மைந்தர்கள்
கட்சித்தாவும் யோகம் உண்டு...

பொறியியல் மாணவர்கள்
பொறுமை அவசியம்...

நீட் தேர்வில்
நிதானம் தேவை...

கடத்தல் தொழில் புரிவோர்
கவனமாகச் செயல்படுங்கள்...

மது பிரியர்களுக்கு
குழப்பமான சூழல் நிலவும்...

இரக்கமில்லாத அன்பர்களுக்கு
உறக்கம் தடைபடும்...

தகுதியில்லாத நபர்களுக்கு
தபால்வழி அனுகூலம் உண்டு...

அரசியல் அயோக்கியர்களுக்கு
உடன் இருப்பவர்களால் ஆபத்து...

வேலை கிடைக்காதவர்கள்
வெளியூர் பயணம் தவிர்க்கவும்...

வசதி இல்லாத நபர்கள்
வடக்கு திசையில் வழிபடவும்...

இருப்பதையும் இழந்ததவர்கள்
இஷ்ட தெய்வத்தை வணங்கவும்...

நெடுவாசல் தோழர்கள்
நெய் தீபமிட்டு பரிகாரம் செய்யவும்...

மல்லையா வழக்கில்
தீடீர் திருப்பம் ஏற்படும்...

விவசாயிகள் விசயத்தில்
யாரையும் நம்ப வேண்டாம்...

நேயர்களே...
இந்த வாரம் மட்டுமல்ல
வரும் அனைத்து நாட்களிலும்
அரசியல்வாதிகளிடம்
விழிப்புணர்வு அவசியம்!

---கணித்தவர் ஜோதிடர் ஜோக்கர்

எழுதியவர் : செல்வம் ஜெ. (9-May-17, 10:40 am)
சேர்த்தது : செல்வம் ஜெ
பார்வை : 153

மேலே