கவி கூவு குயிலே

உழவன் ஏர் தொழபட கூவாய்
மனிதம் ஒன்றாய் மகிழ்பட கூவாய்
சாதிய தீ தணிந்திட கூவாய்
நித்தம் சோறு கனிந்திட கூவாய்
மாரி அவள் பொழிந்திட கூவாய்
மாற்றம் நல்லாய் மலர்ந்திட கூவாய்
மழலை மனம் உறைந்திட கூவாய்-அது
முதுமை வரையில் நிலைத்திட கூவாய்
கவியும் இசையும் ஒருங்கிட கூவாய்
உனைபோல் தமிழும் உயர்ந்திட கூவாய்
வள்ளுவன் புகழ் வாழ்ந்திட கூவாய்
அவன்வழி அகிலம் சிறந்திட கூவாய்
நல்லோர் சொல் மெய்த்திட கூவாய்
ஊடகம் மெய்யில் ஒளிர்ந்திட கூவாய்
காதல் காமம் தெளிந்திட கூவாய்
பெண்டிர் என்றும் களித்திட கூவாய்
கூவியும் இறை இறங்கிட மறுத்தால்
அந்தோ !
கதிரியக்கம் உனை அழித்திட கூவாய்


$வினோ....

எழுதியவர் : வினோ.... (10-May-17, 10:50 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 169

மேலே