சொல்லும் பொருளும் 10 - அளி, அழி

கீழேயுள்ள பாடலுக்குப் பொருள் தேடும்பொழுது, 'அளி', 'அழி' என்ற சொற்களுக்கு 'வண்டு' என்ற பொருள் தருகிறது.

அழி:

Beetle; வண்டு. அழிமல்கு பூம்புனலும் (தேவா 78, 3)

எனவே அளி, அழி சொல்லின் வேறுபாடுகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

சென்ற புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும்
அளிவந்தார் பூங்கோதா யாறு மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு. 1 ஏலாதி

அல்லது

சென்ற புகழ்செல்வ மீக்கூற்றஞ் சேவகம்
நின்ற நிலைகல்வி வள்ளன்மை - என்றும்
அழிவந்தார் பூங்கோதா யாறு மறையின்
வழிவந்தார் கண்ணே வனப்பு. 1 ஏலாதி

அளி

1. Love; அன்பு. அளி நயந்து (இரகு. நாட்டு. 1)
2. Clemency, grace; அன்புகாரணத்தாற் றோன்றும் அருள். (தொல். பொ. 247, உரை)
3. Desire; ஆசை, அளியா லிவ்வூர் காணு நலத்தின் (கம்பரா. ஊர்தே. 83)
4. Coolness; குளிர்ச்சி. திங்களு ளளியுநீ (பரிபா. 3, 67)
5. Gift, present; கொடை. (திவா)
6. Civility, politeness; உபசாரம். (குறள், 390, உரை)
7. Poverty, wretchedness; எளிமை. தாய்த்தாய்க் கொண்டேகு மளித்து (நாலடி. 15)
8. Unripe fruit; காய். (மூ. அ)

அளி

1. Lattice, fence; கிராதி. அளிப்பாய்ச்சிய வீடு
2. Crib for straw; மாட்டுக்காடி

அளி

1. Bee, beetle; வண்டு (திருவாச. 6, 10)
2. Spirituous liquor; மது (பிங்)

அளி

Bark tree; மரவுரிமரம்

அளி

1. Honey; தேன் (நாநார்த்த)
2. Ringworm shrub; வண்டுகொல்லி (பச். மூ)

அளிதல்

1. To become mellow; அறக் கனிதல். அளிந்ததோர் கனியே (திருவாச.37. 4)
2. To be over boiled; குழைதல். சோறளிந்து போயிற்று.
3. To be attached; பிரியமாயிருத்தல். மந்தி யளிந்த கடுவனையே நோக்கி (திவ்.இயற், 3, 58)
4. To mix, mingle; கலத்தல். சிறியார்களோ டளிந்த போது (கம்பரா.ஊர்தே.154)

அளித்தல்

1. To protect, take care of, nourish; காத்தல் (பிங்)
2. To give, bestow; கொடுத்தல் (பிங்)
3. To crowd together; செறித்தல் (பிங்)
4. To yield, beget; ஈனுதல். காந்தார பதியளித்த மெய்க்கன்னி (பாரத. சம்பவ 23)
5. To speak, express; சொல்லுதல். முகம னளித்தும் (கல்லா 13)
6. To create; 1. To be gracious, show favor; 2. To create desire; 3. To remove weariness; சிருட்டித்தல். யாவையு மயன்கணின் றளிப்பான் (கந்தபு. ததீசியுத். 9); அருள்செய்தல். (சிறுபாண். 210.); விருப்பமுண்டாக்குதல். அளித்தயில்கின்ற வேந்தன் (சீவக. 192).; சோர்வை நீக்குதல். கொண்டவற் களித்ததோர் குளிர்கொள் பொய்கை. (சீவக. 1622)

அழி

1. Ruin, destruction; கேடு. அழிவந்த செய்யினும் (குறள் 807)
2. Straw; வைக்கோல். உழுத நோன்பக டழிதின் றாங்கு (புறநா125)
3. Crib for straw; வைகோலிடுங் கிராதி. மாட்டுக்கு அழியில் வைக்கோல் இருக்கிறதா?
4. Lattice; கிராதி
5. Pity; இரக்கம். அழிவரப் பாடிவருநரும் (புறநா.158).

அழி

Beetle; வண்டு. அழிமல்கு பூம்புனலும் (தேவா 78, 3)

அழித்தல்

To find a solution of; to resolve; விடைகாணுதல். கதை அழித்தல்

அழித்தல்

To despise; நிந்தித்தல். அழித்துச் சொன்னவாறு (தக்க யாகப் . 494, உரை)

அழி

1. Excessive; மிகுதி. அற்றா ரழிபசி தீர்த்தல் (குறள் 226)
2, Pain; வருத்தம். அழிதக மா அந்தளிர் கொண்ட போழ்தினான் (கலித். 143)

அழி

Place where the lagoon joins the sea; கழிமுகம்

அழிதல்

1. To perish, to be ruined; நாசமாதல்
2. To decay, to be mutilated; சிதைவுறுதல். ஆரவண்டலழியும் (நைடத.கைக்கி10)
3. To fail, to be frustrated; தவறுதல். நீயுரைத்த தொன்று மழிந்திலது. (கம்பரா.பிராட்டி30)
4. To become unsettled, to lose standing; நிலைகெடுதல். அழிந்த குடி
5. To be defeated; தோற்றல். வாதி லழிந் தெழுந்த (தேவா.859, 3)
6. To melt with love; மனம் உருகுதல்.
7. To suffer, to be troubled; வருந்துதல். சூணயத் திறத்தாற் சோர்வுகண் டழியினும் (தொல்.பொ.150)
8. To be disheartened; மனம் உடைதல். இதற்கு உள்ளழியேல் (கம்பரா.நகர்நீங்கு.18)
9. To swell, increase; பெருகுதல். அழியும் புன லஞ்சன மாநதியே (சீவக.1193)
10. To sympathize with; பரிவுகூர்தல். புணர்ந்த நெஞ்சமொ டழிந்தெதிர் கூறி விடுப்பினும் (தொல்.பொ.40)
11. To be spent, used up, sold out, exhausted; செலவாதல். என்னிடமிருந்த சரக்கெல்லாம் அழிந்து விட்டது.

அழித்தல்

1. To destroy, exterminate; சங்கரித்தல். (கந்தபு.நகரழி.6)
2. To spend; செலவழித்தல். தேடா தழிக்கிற் பாடாய் முடியும் (கொன்றை)
3. To ruin, damage; கெடுத்தல்
4. To efface, obliterate; கலைத்தல். கோல மழித்தி யாகிலும் (திவ்.நாய்ச்.2. 5)
5. To disarrange; குலைத்தல். ஈடுசால் போரழித்து (சீவக.59)
6. To change the form or mode of; உள்ளதை மாற்றுதல். உடையினைப் பலகாலும் அழித்துடுத்தல் (தொல்.பொ.262, உரை)
7.To cause to forget; மறப்பித்தல். பொய்த லழித்துப் போனா ரொருவர். (சிலப்.7, 43)
8. To smear; தடவுதல். சுண்ண மழித்திலை தின்று (உபதேசகா.சிவபுண்ணிய.225)
9. To leave off; bring to a close; நீக்குதல் (கலித்.131, 34)

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-May-17, 11:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 549

மேலே