வாழ்க்கை

கொடிகளில் அவிழ்ந்த மலர்கள் எல்லாம் இறைவன் பாதம் சேர்வதில்லை,
மரங்கள் உதிர்த்தக் கனிகள் எல்லாம் மண்ணில் விதையாகி முளைப்பதில்லை,
ஊற்றுகள் சுரக்கும் நீர் எல்லாம்
கடலிலே சென்றுக் கலப்பதில்லை,
கடவுளின் படைப்புகள் அனைத்தும்
வாழ்வில் இன்பம் காண்பதில்லை,

நிலையினை மறக்கும் வாழ்வின் சோகம்
விதியினை வென்ற சரித்திரம் இல்லை,
புதுமையை தேடும் விழிகள் என்றும்
இன்புற்று வாழ்வதும் இல்லை,
ஒரு முறை மலர்ந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் செடியில் சேர்வது இல்லை,
வாழ்வினை முழுமையாக வாழ்ந்து சலித்த
மனிதனும் பூமியில் இல்லை,

பிறர் கொண்ட இன்பம் நம்மைச் சேர்வதில்லை,
பிறரின் துன்பம் நமை விடுவதுமில்லை,
கொண்டுவந்தது என்று எதுவும் இல்லை
சென்று சேர்கையில் எதுவும் நம்முடையது இல்லை,
இருக்கும் வரை எல்லாமும் எல்லார்க்குமாய் வாழ்வோம்
போகும் நாள்களில் எல்லோரது நினைவில் வாழ்வோம்....

எழுதியவர் : தமிழ் ப்ரியா (11-May-17, 12:17 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 304

மேலே