சிறியா சிறேயா

ஏண்டி பக்கத்துத் தெருவு பூங்கோதை உனக்கு மொத பிரசவத்திலேயா ரட்டை பொண்ணுங்ங பொறந்திருக்குதாம். என்னாலயும் வர முடில. உன்ன ஆறு மாசமா பாக்காம துடிச்சுப் போயிட்டண்டி. கொழந்தைங்க நல்ல இருக்குதுங்களா?
😊😊😊😊😊
நாங்க நல்லா இருக்கறோம் பாட்டிம்மா. உங்களப் பாத்துட்டுப் போலாமானுதான் வந்தேன்.
😊😊😊😊😊😊😊
சரிடி பூங்கோதை, பொண்ணுங்களுக்குப் பேரு வச்சிட்டீங்களா?
😊😊😊😊😊😊
வச்சுட்டோம் பாட்டிம்மா. ஒரு பொண்ணு பேரு ஷ்ரியா, இன்னோரு பொண்ணு பேரு ஷ்ரேயா.
😊😊😊😊😊😊
என்னடி பேருங்க இது. சிறியா, சிறேயா, பெரியா, பெரேயா. உங்களுக்குத் தமிழ்ப் பேருங்களே கெடைக்கலயா.
😊😊😊😊😊😊
நம்ம தமிழ் அழகான இனிமையான செம்மொழி. ஆனா 99% தமிழர்கள் இந்திப் பேருங்களத்தான் அவுங்க பிள்ளைங்களுக்கு வச்சிருக்காங்க. தமிழை வளர்க்கவேண்டிய ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் எழுத்தாளர்களே அவுங்க பிள்ளைங்களுக்குத் தமிழ்ப் பேருங்கள வைக்க விரும்பறதில்ல. அதானலதான் பாட்டிம்மா நாங்களும் எங்க பொண்ணுங்களுக்கு ஷ்ரியா, ஷ்ரேயா -ன்னு இந்திப் பெருங்கள வச்சுட்டோம்.
😊😊😊😊😊
அடியே பூங்கோதை, படிச்சவங்க, படிக்காதவங்க எல்லாம் சினிமா பாத்து கெட்டுப் போயிட்டீங்கடி. யாரக் கொற சொல்லறது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல; சிந்திக்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
(Shriya = prosperity. Shreya = beautiful)

எழுதியவர் : மலர் (11-May-17, 4:13 pm)
பார்வை : 156

மேலே