ஆதிக்கம் அழிந்ததா

ஒழியட்டும் ஆதிக்கக் கலாச்சாரம்
ஒளிரட்டும் சமத்துவப் பண்பாடு
முடியட்டும் விஐபி விருந்து
தொடரட்டும் மோடியின் வனப்பு
அழியட்டும் சுழற்விளக்கு ஆதிக்கம்
ஆளட்டும் சாமானிய மேலாண்மை
நடக்கட்டும் இவையாவும் இனியேனும்

ஈடேறுமா?
இறுதிவரை இது தொடருமா?
பிரதிகளில் பிரதிபலிக்கும் இவையாவும்
ஈடேறுமா?


எத்தனைக் கேள்விகள் என்னுள்
கார்களில் ஆதிக்கம் அழித்ததால்
எத்தனைக் கேள்விகள் என்னுள்
ஒளியை நீக்கினால் ஒளி பிறக்குமா? என
எத்தனைப் பார்வைகள் என்னுள்
சுழறும் புவியினிலே சுழற்விளக்கை அகற்றியதால்
எத்தனைப் பார்வைகள் என்னுள்
கோமாளித்தனமா? நாடகமா? முதல் விதையா? என
எத்தனைப் பார்வைகள் என்னுள்
பீரங்கி துவங்கி கக்கூஸ் டெண்டர் ஊழல்வரை
எத்தனை யோசனைகள் என்னுள்
ஆதிக்க அளவல் இல்லாநாட்களும் இனியுண்டோ? என
எத்தனை யோசனைகள் என்னுள்
மாடமாளிகை விருந்திற்கும் குறைவும்தாணுண்டோ? என
எத்தனைக் குழப்பங்கள் என்னுள்
சாமியைச் சாமானியனும் தரிசிக்க முடியுமா? என
எத்தனைக் குழப்பங்கள் என்னுள்
குறைதீர்க்க நேரமில்ல கூத்தாடி சந்திப்பும் குறையுமா? என
எத்தனை மேன்மைகள் என்னுள்
மீண்டும் ஓர் தீண்டாமை ஒழிப்பு தேவையில்லை என
எத்தனை மேன்மைகள் என்னுள்
மெரினாவில் மீண்டும் ஓர் போராட்டம் தேவையில்லை என
எத்தனை மடமைகள் என்னுள்
இவையாவும் நாடகம் என அறிந்தும் பிதற்றும்
எத்தனை மடமைகள் என்னுள்………………



சிறப்பைச் சிதைத்திடல் வேண்டும்
ஆம் சிறப்பு என்னும் சொல்லைச் சிதைத்திடல் வேண்டும்
சுழற் கழற்றும் முன்…….



ஏடிம் தரிசனம் தொட்டு
ரயிலில் ராயல் பயணமும் விட்டு
வானம் முதல் வாகனம் வரை
பூமி முதல் புவிசார் கல்வி வரை
ஆம் கல்வி முதல் களவி வரை
காகிதம் முதல் கணினி வரை
சிறப்பு உற்றவனுக்கு
மிச்சமும் மீதியும் மற்றவனுக்கு
இதையல்லவா நீக்க வேண்டும்






ஞாயவிலைக்கடை துவங்கி
கள்ளுக்கடை வரை
ஆம் நவீன மதுபான கள்ளுக்கடை வரை
ஆட்சியர் அலுவலகம் துவங்கி
கடைநிலை நூலகம் வரை
அரசு வங்கி துவங்கி
டோல்கேட் தானியங்கி வரை
சிறப்பும் சலுகையும் சார்ந்தோருக்கு
420 வெயிலில் சிரங்கும், அம்மையும் காய்ந்தோருக்கு
இதையல்லவா நீக்க வேண்டும்
இதையாவும் அறியார் பாவம் ஆட்சியாளர்
அவர்களுக்கு அலுவல் அதிகம்
அளவளாவே நேரமில்லை
வேலைகள் அதிகம்
வேடிக்கை பார்க்கவும் முடியவில்லை
காவல்கள் அதிகம்
கழிவரை ஒதுங்கவும் நேரமில்லை
ஒத்துக்கொள்கிறோம் இவையாவும் தெரியவில்லை என
பவனிவரும் கார்களுமா தெரியவில்லை



அமைச்சர் ஒரு கார்
காவலர் இரு கார்
நல்லுணர்வு சேவகர்கள் நாற்கார்
கோடிகள் புரளும் கோஷ்டிகள் கார்
இதுவுமா காணவில்லை சர்கார்
இதையேனும் நீக்கியிருக்க வேண்டும்
வெற்றுச் சுழற்விளக்கை நீக்கும் முன்

ஆதிக்கம் சிவப்பொளி என்கிறார்கள்
காரிருள் என்பேன்
ஆம் கார் இருள்….
மாமழை பொழியாமல் நம்
குருதியும் கண்ணீரும் குடித்து
சிறுநீரை மட்டும் மிச்சம் வைக்கிறது

மே 1 முதல் மாற்றம் என்கிறார்கள்
மாற்றம் ஓர் விதை என்பேன்
ஆம் விதைத்திடல் வேண்டும்
உரமிடல் வேண்டும்
உள்ளத்தில்
மக்கும் முன்
புகட்டிட வேண்டும் இவையாவும்
வெற்று நாடகத்திற்கு முன்
ஆம் நாடகம்
கபட நாடகம்
கேளி செய்து கேவலப்படுத்தும் கேளிக்கை நாடகம்
மக்களை மாக்களாக்கும் கோமாளி நாடகம்
ஊடக உரையாடலில் வேஷமிடும் வேடிக்கை நாடகம்
உணர்வு போராட்டம் நடத்தும் ஊழல் நாடகம்
இவை அனைத்திற்கும் புகட்ட வேண்டும்
உரிமை நாடகம்- ஒட்டுரிமை நாடகம்
மடமை களைவோம்
உடமை கொள்வோம்
ஒன்று படுவோம்
ஓரணி திரள்வோம்
வேஷங்கள் வேரறுப்போம்
காசியினிலே தொலைப்போம்
ஆதிக்கம் அடக்குவோம்
ஆடம்பரம் ஒடுக்குவோம்
சமத்துவம் பேணுவோம்
நல்லரசு காணுவோம்
நல்வாக்கு கொண்டு
வல்லரசு காணுவோம்
வாக்கு கொண்டு……………………NSK

எழுதியவர் : NSK (11-May-17, 6:45 pm)
சேர்த்தது : கௌசிக்
பார்வை : 442

மேலே