தெய்வத்தின் திருமுகம்

தாயே ! -
என்னுயிர் தாயே ! -
என்னை உயிர்த்தாயே !!

முந்நூறு தினம்
முழுதவம் செய்தாயே !
கண்ணுறக்கம் என்னால்
கலைந்தாயே !
பளுவென்று நினையா
பகலிரவு சுமந்தாயே !
முழு நேரம் எனை
மூச்சாய் முகர்ந்தாயே !
தமிழ் போல்
தன்னில் காத்தாயே !
தரணியே போற்ற
தனயனை ஈன்றாயே !

தாயே !
உன் இரத்தத்தில் பகுதி எடுத்து -
உன் இதயத்தில் சுருதி தொடுத்து -
உன் உயிர்மூச்சின் இறுதி பிடித்து -
உன் உறவாய் எனை பிரதி எடுத்தாயே !!

தாயே !
உனக்கென்று எது வேண்டும் கேள் என வினவும் போதெல்லாம்
உள்ளன்பு கொடு அது போதும் என உரைப்பாயே !!

தாயே !
பிரம்மாவாய் இருந்தாய் நீ என வியக்கும் போதெல்லாம்
பிள்ளையாய் என்றும் இரு எனக்கு என சிரிப்பாயே !!

தாயே !
தாய்மை - அதை
எழுத்துக்களில் இயற்றல் இயலாது !
வார்த்தைகளில் வகுக்க இயலாது !
வரிகளில் தொகுக்க இயலாது !
புத்தகங்களில் பகிர்க்க இயலாது !
உணர்வுகளில் உருக்க இயலாது !

தாயே !
நான் -
உந்தன் ஒருமுகம் ...
நீயோ -
தெய்வத்தின் திருமுகம் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (13-May-17, 3:09 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 710

மேலே