நல்லவேளை கஞ்சன் இல்லை

ஏண்டா மாப்ள, உம் பொண்ணுப் பேரு என்னடா?
😊😊😊😊😊
அவ பேரு 'குஞ்சன்'-டா.
😊😊😊😊😊
ஆஹா...'குஞ்சன்'- ரொம்ப அழகான பேருடா.
நல்லவேளைடா சாமி, உம் பொண்ணுக்கு 'கஞ்சன்' -ன்னு பேரு வைக்காம விட்ட. அதுவரைக்கும் சந்தோசண்டா. எங்க பாட்டி பேரு குஞ்சம்மாள். எஞ் சித்தப்பா பேரு குஞ்சப்பன். ஆனா உன்னோட 'குஞ்சன்' ரொம்ப வித்தியாசமா இருக்குதே!
😊😊😊😊😊😊
டேய் மாப்ள இந்தப் பேரு தமிழ் குஞ்சன் இல்ல. இந்திக் 'குஞ்சன்' -டா. ஆண் கொழந்தைக்கும் இந்த அழகான பேர வச்சுக்கலாம்.
😊😊😊😊😊
சரிடா மாப்ள இந்த இந்திக் 'குஞ்சன்' பேருக்கு என்னடா அர்ததம்.
😊😊😊😊😊😊
தமிழர்கள்ல 98 % பேர் அவுங்க பிள்ளைங்களுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்கறதில்ல. இந்தப் பட்டியல்ல
ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் பிரபல தமிழ் எழுத்தாளர்களும் அடக்கம். இவுங்கள்ல அர்த்தம் தெரிஞ்சு பிறமொழிப் பேருங்கள வைக்கறவங்க 20 % கூட இருக்கமாட்டாங்க. (Padma - ன்னு பேரு வச்சிட்டு Badma-ன்னு எழுதுவாங்க, கூப்புடுவாங்க. (Pavitra=Bavitra ). பவித்ரா -ங்கற பேருக்கும் அதே நிலைதான். இதுமாதிரி பேருங்களுக்கு என்ன அர்ததம்னு கேட்டா பேரு வச்ச பெற்றோர்களுக்கே தெரியாது. மாப்ள, இப்பெல்லாம் அர்த்தம் முக்கியமில்ல. அர்த்தம் எல்லாருக்கும் தெரியாத பிறமொழிப் பேருங்கள பிள்ளைங்ஙளுக்கு வைக்கறதுதான் தற்கால தமிழர்களின் நாகரீகம்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
(Gunjan/-hummingbees
Padma-lotus
Pavitra

=Pure
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
சிரிக்க அல்ல. சிந்திக்க

எழுதியவர் : மலர் (13-May-17, 5:22 pm)
பார்வை : 248

மேலே