அன்பின் வழியில் ஒரு பாடல்

அளவற்ற அன்பே இருதயத்தில் நிறைந்திருக்கையில் தனிமையை எண்ணி வருந்துவானேன்?

வாழ்க்கை முழுவதும் சந்தோஷம் தான்..
துன்பமெல்லாம் நம் கற்பனை தான்...

சாட்சிபாவமாய் அன்பே நிகரற்ற சக்தியென யாம் சிந்திக்கும் ஒவ்வொரு எண்ணமும் அகிலம் முழுவதும் பரவி உண்மையன்பைச் சிருஷ்டிக்கும் காட்சியை காண்க ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாதே...

அன்பால் அகக்கண் திறக்கப்படாவிடில் புறக்கண்ணால் விளைவது யாவும் துன்பமே....

எவ்வளவு செலவு செய்தோம்?
எவ்வளவு வரவு வந்தது? என்ற லாப, நஷ்டக் கணக்கெல்லாம் உண்மையன்பில் ஏதடா?
எதிர்பார்ப்புகள் ஆயிரம் சுமந்து, அன்பு கொண்டால் என்றும் துன்பமே என்று பதைபதைக்கும் அன்பு மானிடா பதில் கூறடா...

அழகென்று வெண்மை விரும்பும் மானிடா, உனது கருவிழியில் வெண்மை நிறைந்தால் உனக்கு கண் பார்வை என்பது ஏதடா?

கண் போன போக்கிலே மனதை அலைய விடும் மானிடா, அருள் தரும் அன்பின் வழி நின்று வாழ்ந்து அழிவில்லா ஞானத்தை நீ பெறுவது எப்போதென்று கூறடா?...

சித்தமெல்லாம் அன்பு மயமே...
அன்பே நீ இருக்கையில் எனக்கு ஏது பயமே?...
அன்புக்கு அன்பு ஒன்றே ஈடாகுமே...
அன்பில்லையெனில் முழுவாழுவும் நரகமாகுமே...
அன்போடு வாழ்ந்தால் யாவும் ஜெயமாகுமே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-May-17, 8:41 pm)
பார்வை : 1910

மேலே