அன்பே அன்பை ஏற்கும்

காதலுக்காக உன்னை வளர்த்த பெற்றோர் தூக்கி எறியும் முன் சற்று யோசி...
நீ பிறந்தது முதல் உனக்காக எல்லாவற்றையும் செய்து மீளாத் துயரில் வாழ்ந்த, வாழும் உனது பெற்றோரை நீ நேசி...
அவர்களுடைய உண்மையன்பை நீ சுவாசி...
அந்த அன்பைக் காயம் செய்தால் நீ ஆவாய் பரதேசி...

காதலன் ஏமாற்றலாம்...
காதலி ஏமாற்றலாம்...
ஆனால் உன் பெற்றோர்
உன்னை ஏமாற்ற எண்ணார்...
அந்த அன்புடையோரை நீ ஏமாற்ற எண்ணாதே...
ஏமாற்றினால் உன் வாழ்வே நரகமாகுமே...

எந்த பெற்றோர் தன் மகன்/மகள் வழிதவறிச் செல்வதை விரும்புவர்?
புகைத்தலில் தொடங்கி மது குடித்தல் வரை யாவும் நீ உன் பெற்றோருக்குச் செய்யும் துரோகமாகுமே...

ஏதடா சந்தோஷம்?
மற்றவர் சந்தோஷத்தைப் பறித்து நீ வாழ்வதா?

நீ குற்றமே செய்வாயெனில் உன்னை பெற்று வளர்த்ததே உன் தாய் தந்தை செய்த பெருங்குற்றமாகுமே...

அன்பு என்றும் அன்பை ஏமாற்றாது...
அன்பில்லா யாவரும் ஏமாற்றும் குணமுடையோராகிய குற்றவாளிகளே...
அன்பே அன்பை ஏற்கும்...

கலங்கமில்லாதது அன்பு...
அதைக் கலங்கப்படுத்துவது மிருகப் பண்பு...
இதை அறியாது இருக்கிறாயோ நோன்பு?..
அதனால் உண்டாகுவதில்லை மாண்பு...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-May-17, 4:56 pm)
Tanglish : annpae anbai erkum
பார்வை : 1359

மேலே