குடிக்காதீங்க

சாலையில் வாகனம் வேகமாக போக நெடுஞ்சாலை ஒரு நிமிட ஓய்வில்லாமல் ஓடியது.அந்த வேலையில்ஓய்வாக ஈக்கள் வாயில் உட்கார்ந்து சுற்றிலும் ஈரமாக இருக்க பாதி ஆடைகள் களைந்த நல்லதம்பி சாலையில்  ஓரமாக ஓய்வெடுத்தார். மதுவின் வாசனை வீசியது .அதே கடையில் மதுவை அருந்தி விட்டு அந்த வழியாக வந்த செல்வம்
நல்லதம்பியை பார்த்து ஓடி வந்து டேய் எழுந்திரு,எழுந்திரு என கூற முதல் நாள் இரவு குடித்து படுத்தவன் எழுந்திருக்கவே முடியல.
சூர்ய ஒளி பட அவனுக்கு தலைவலித்தது ஒருவாரு எழுந்து நடக்க முயற்ச்சி செய்தபோது முடியவில்லை .தீடிரென்று வாந்தி எடுக்க பயந்து கொண்டே டேய் எப்படியாவது எங்க வீட்டல சேத்துரா என கெஞ்சினான் .செல்வம் தன் சைக்கிளில் நல்ல தம்பியை ஏற்றி தள்ளாடி சைக்கிளை ஓட்டிசெல்ல வீடுவந்ததும் யோவ் என்னய்யா வேலைக்கு போரேன்னு சொன்ன ஆனா குடிச்சிட்டு வந்திருக்க,பணம் ஏதாவது இருக்கா என கேட்க பாக்கட்ல இருந்த பணத்த காணோம்,கொஞ்சம் அதிகமாக குடிச்சிட்டேன் அதான் ரோட்டுல வீழ்ந்திட்டேன் என தன் மனைவியிடம் கூறினான்.சரியா வந்து சாப்பாடு என்றாள் .தலையில் தண்ணீர் ஊற்றி குளித்துவிட்டு நல்லதம்பி நல்லவனான் .விபூதி அணிந்து சிறிது சாப்பாடு சாப்பிவிட்டு மயக்கமாக இருந்ததால் படுத்துதூங்கினான் பாதிபூசாத வீடு
மணல் தரை மணல் மேல் பாய் போட்டு படுத்தான் .எதிர்கால கனவு இல்லை .பிள்ளைகள் பற்றி கவலை இல்லை .வீட்டு கழிப்பிடம் கட்ட வந்த லோனில் காலம் தள்ள ,கழிப்பிடம் கட்டிய பாடு இல்லை வீடும் கட்டிய பாடு இல்லை என மனைவி புலம்ப அதை கேட்டுக்கு கொண்டே துங்கினான் தூங்கியவன் நினைவில் ஒரு உருவம் இவன் நெடுஞ்சாலையில் கிடந்தபோது ஏதோ செய்வது போண்ற உணர்வு சட்டென்று எழுந்தவனுக்கு சரியாக நினைவு இல்லை .அவளும் கண்ணீரோடு மணல் தரையில் படுத்தாள்.
தீடிரென்று நல்லதம்பி படுக்கையில்
இல்லை .எழுந்தவள் எங்க இந்த ஆளு திரும்பவும் குடிக்க போயிட்டானா என புலம்பியவள் வாசலுக்கு வந்து நின்றாள் எதிரே நல்ல தம்பி குடித்து விட்டு தள்ளாட்டத்துடன் வீடு வந்தவன் அவளை பார்க்காதவன் போல உள்ள சென்று பாயில் விழுந்தவன் வாந்தி எடுக்க நிற்கவேஇல்லை .இவனுக்கு மரணபயம் ஓரு சொட்டு சாராயம் உள்ள தங்கவில்லை ரத்தத்திலும் கலக்கவில்லை.அடிவயிறு கலங்கி வாந்தி வர ரத்தமும் சேர்ந்து வந்தது.உடனே அவன் மனைவி அருகில் சென்று ஆட்டோகாரனை கூப்பிட்டு கொண்டே முனுமுனுத்தாள் .ஆஸ்பத்திரியை நோக்கி ஆட்டோ சென்றது நல்லதம்பி மனைவி ஐயா என் புருஷனை காப்பாத்துங்க என கெஞ்சினாள். மருத்துவர் அவளை பார்த்து இவனே குடிகாரன் இவனுக்காக ஏன் அழறே என கேட்க,அவள் சொன்னா இந்த சமூகத்தில துணையோட வாழனும் ஐயா இவரு ஒருஓரமா உசிரா கிடந்தா போதும் நான் வேலைக்கு போயி பார்த்துகிவன் என்றாள்.
சரிமா பயப்படதா நான் பார்த்துகிறேன் என்றார்.யோவ் நல்ல தம்பி கண் விழித்து பார்யா என டாக்டர் கூற கண்விழித்தவன் அந்த முகத்தை பார்த்ததும் பயந்தான் நெடுஞ்சாலையில் குடித்துவிட்டு கிடந்த இரவில் ஏதோ செய்தவர் இவர்தான் என்றது போண்ற நினைவில் பயந்தான். ஐயா என்னை ஒன்னும் பண்ணீடாதிங்க நான் இனிமே குடிக்கவே மாட்டேன் என்றான்.அதற்க்கு டாக்டர் இனிமே நீ நெனைச்சாலும் குடிக்க முடியாது அப்படியே குடிச்சாலும் ஒருசொட்டு கூட வயித்தல தங்காது என்றார்.அவன் திடுக்கிட்டு ஏன் டாக்டர் என கேட்டான்.அதற்க்கு டாக்டர் உன் உடம்பில் ஓரல் அல்ஹாகாலிக்  ரிமூவர் கிட் என்ற மருந்தை செலுத்தியது நான்தான் நெடுஞ்சாலையில் நீ குடிச்சிட்டு மயங்கி கிடந்தபோது நாங்கள் ஊசி வழியாக ஏத்திட்டோம்.இனிமே குடிகாரங்களுக்கு மிகப்பெரிய சாவால் என்றார்.அவள் மனைவிக்கோ மிகவும் சந்தோஷபட்டாள் .டாக்டர் பரத்க்கு சிறந்த கண்டுபிடிக்கு விருது வழங்கும் விழாவில் நல்லதம்பி நல்லவராக மாறி இதை நினைவு கூற ஓரே கைதட்டல்..
ஆனால் குடிகாரர்கள் இந்த ஊசியை போட்டு கொள்ள பயந்த வண்ணம் ஓட போலீஸ் படையுடன் ஊசி ஊரெங்கும் போட பட உள்ளது குடிகாரர்களே உஷார் என குடிகாரர் மத்தியில் பேச்சு அலைபோல் பரவியது.குடிகாரர்களே ஜாக்கிரதை..

எழுதியவர் : சிவசக்தி (14-May-17, 6:56 pm)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 431

மேலே