மாடர்ன்

மாடர்ன்

மதி மழுங்க இம்மானிடத்தை
ஆக்கியது 'மாடர்ன்'

நம்பிக்கை இழந்து நேயம்
மறக்கச் செய்தது 'நவீனம்'

தொலை சிந்தனை தொலைத்து
சிறைப்படுத்தி வைப்பது 'தொலைக்காட்சி'

இங்கிதம் இல்லாத இச்சைகள்
இன்பமாக காட்டுவது 'இன்டர்நெட்'

அகிம்சை காட்டிய மண்ணில்
அமைதி நீக்கி வன்முறை
காட்டுவது 'திரைப்படங்கள்'

இதுதான் பண்பாடு பாடும்
பாரத மண்ணில் மானுடம்
மார்தட்டிக் கொள்ளும்

'மாடர்ன் உலகம்'

எழுதியவர் : கவிக்குயில் (16-May-17, 11:37 am)
Tanglish : maadern
பார்வை : 139

மேலே