ஏலே அக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ல

அக்கா
பிறந்த நாள் வாழ்த்துகள் ...

கவிதை எழுதணுமா பிரபா
அய்யயோ
கவிதையா ? அப்படினா !

ம்ம் கவிதை
கவிதை ...

அக்கா ...
எப்புடி ?

ஆன் உன் தலை ....
ஹி ஹி


நான் கவிதாயினி அல்ல ... மனிதினி ...அவ்வளவு தான் என் வரையறை .....
எனக்கு பிடித்ததெல்லாம் தமிழ் செந்தமிழ் .....
நான் எழுதுவது கவிதை அல்ல ...



உனக்கு நினைவிருக்கிறதா
உன் மடியில் தலை வைத்து
தினந்தோறும் ஒரே கதையையே கேட்பேனே...
நீயும் சலிக்காமல் தினமும் சொல்வாய் ....
அந்த கதையை எப்பொழுதும் மறந்ததே இல்லை அக்கா ...

சாரு கிருத்திக் வாலு பசங்கள சாமாளிக்கறது
பெரிய விடயம் அக்கா
சித்தி என்று பாசமாக ஓடி வந்து இந்த குட்டி பையன் கலைக்கறான் அக்கா
திருப்பியும் அடுக்கணும் திருப்பியும் கலைச்சிட்டு சிரிப்பான்

சுட்டி டிவி ஏ பாக்கறான்
இன்னொருத்தனோ மட்டை பந்தாட்டம் ....
நம்மள போலயே ரிமோட் சண்டை ஜாலியா போட்றானுங்க ...
ஜாலியா நிறைய காலாய்ச்சிப்போம் ...அந்த ஐஸ் பாய் ஐயோ அக்கா அத எல்லாம் மறக்க முடியுமா .....
எல்லாம் அருமையான சின்ன வயசு விளையாட்டு ...நினைக்கும் போதே செமையா இருக்கு அக்கா ....

அக்கா
பள்ளிக்கூடத்துக்கு தலை வாரி சோறு கொடுத்து
அனுப்பும் பொழுதும்
சேலை கட்டி விட்றதாகட்டும்
என்னோடைய இன்னொரு அம்மா
தாய் பெற்ற தாய்
என் இரண்டாவது அம்மா
என் அக்கா

எனக்கு வலிச்சா
எனக்காக அவ அழுவா
நான் மயங்கி விழும் பொழுது அவ தாங்குவா
என் வெற்றி பாத்து அவ சந்தோசப்படுவா
அவள் என் உயிர் தோழி
முதல் தோழி
என் அக்கா


(அவ இவ என்று யாரையும் சொன்னதில்லை
டா டி யும் கிடையாது .
எழுத்தில் எழுதும் பொழுது எழுத வேண்டியதாகிறது )

எனக்கு உயிர் தந்த
அம்மா கொடுத்த தோழி
என் அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

~ உன் தங்கை பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (16-May-17, 3:57 pm)
பார்வை : 413

மேலே