வெற்றியின் ரகசியம்…

நண்பனே…!
மே மாத சூரியனை பிடிக்காது;
ஆனால் பனிகாலத்தில் அச்சூரியனையே
உடையாக்கி கொள்வாய்..... ஏனோ…?

கம்பளிப்பூச்சியை படிக்காது;
ஆனால் வண்ணத்துப்பூச்சியை பிடிக்கும்....ஏனோ…?

இரண்டுமே ஒன்றுதான்
அவைகள் காலத்தின் கோலங்கள்
என்பதனை உணர்ந்து கொள்…!.

காலத்திற்கேற்ப உனை மாற்றிக்கொள்!
ஆனால் கொள்கையை மாற்றிக்கொள்ளதே!
உடையை மாற்றிக்கொள்!
உள்ளத்தை மாற்றிக்கொள்ளதே!

துன்பம் மனதை வலிமையாக்கும்
எதிர் நீச்சல் போட்டால் தான்.....

அண்டத்தை ஆளும் சூரியனே
இரவில் தோல்வியுறும் பொது
படைக்கப்பட்ட சிறு உயிரல்லவா நாம்…?

தோல்வியை கண்டு துவண்டுவிடதே!
அதனை தொட்டுக்கொள்!
அடுத்த தோல்வி உனை நெருங்காது....

மாடிக்கு செல்லவேண்டுமென்றால்
படிகளில் ஏறிதான் ஆகவேண்டும்.
முயற்சியோடு உழைத்துப்பார்!
மாடிக்கு செல்லலாம்
லிப்டை எதிர்பார்க்காதே! – அது
அதிஷ்டத்தின் வாயிற்கதவு.....

பெண்ணின் கண்ணை நம்பி
உன்னை இழந்துவிடாதே!
காதல் என்பது சுடாத நெருப்பு
தெரியாமல் தொட்டாலும் சுடும்
தெரிந்து தொட்டாலும் சுடும்
தொடவேண்டிய காலம் வரை தொடாதே!
வெற்றிமாலை உன் கழுத்தை தொடும்......

நல்ல நண்பனுக்கு உயிரையே கொடு!
ஆனால் உயிரை கொடுக்கும்
அளவுக்கு நண்பன் கிடைக்கமாட்டான்.
நீயே உனக்கு நல்ல நண்பனாக்கிக்கொள்!

தனிமையை விரும்பு!
தவறுகள் தானாகவே தெரியும்.
திருத்திக்கொள்!
இல்லையெனில் மாற்றிவிடு.
செய் அல்லது செத்து மடிந்து விடாதே!
மீண்டும் செய்..
மீண்டும் மீண்டும் செய்…
தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் செய்….
களைபடையாதே ஒருநாள் வெற்றி பெருவாய்!
கஜினியை போல்....

அன்பாக பேசு! – ஆனால்
அடிமையாகி விடாதே!
கோபத்தை காட்டு! – ஆனால்
கொடூரன் னாகிவிடாதே!
கோபம்தான் தன்மானத்தின் வெளிப்பாடு
என்பதனை மறந்துவிடாதே! – ஆனால்
கோபமே உனை கொன்றுவிடும்
என்பதனையும் மறந்திவிடாதே!

வழிந்து வரும் நீரை தடுக்கலாம்
ஆனால் காட்டாற்று வெள்ளம் ?
உழைப்பை நண்பனாக்கி உழைத்துப்பார்!
அதனையும் தடுக்கலாம் கரிகாலனை போல்...

இரவும் இருந்தால் பகலும் உண்டு
இனிப்பும் இருந்தால் கசப்பும் உண்டு
இன்பமும் இருந்தால் துன்பமும் உண்டு
உழைப்பும் இருந்தால் பலனும் உண்டு

உன்னுள் ஆயிரமாயிரம் திறமைகள்
மறைந்துகிடக்கும் – அதனை
தேடி தோண்டிப்பார்!

அறியாததை செய்வதை விட
அறிந்ததை சிறப்பாகச் செய்!
செயலை செய்வதென்றால் உலகில்
உன்னை விட சிறப்பாக
செய்யமுடியாத அளவுக்கு
சிறப்பாக செய்ய முயற்சி செய்!

இன்று நினைத்தை இன்றே செய்துவிடு!
நாளை என்று நாட்களை கடத்திவிடாதே!
நாளை வேறொருவன் சிறப்பாக செய்துவிடுவான்.
முடிந்தால் நாளை செய்ய வேண்டியதை
இன்றே செய்து முடித்து விட்டால்
வெற்றியின் தூரம் குறையும் அல்லவா…?

***********************
சிகுவரா

மார்ச் 1997 ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவாரா (16-May-17, 11:45 pm)
சேர்த்தது : சிகுவரா
பார்வை : 3253

மேலே