தமிழ் கவிஞன்

எழுதுவான் கவிஞன் ,

அவன் எழுதுவது எழுத்து அல்ல
அவைகள் அவன் ஆவியின் இரத்த துளிகள் ..........

சமுத்திரமாய் விரியும் அவற்றை அடக்கி அடக்கி
சிறு காகிதத்தில் துயில செய்வான் ,,,,,

அவனது ஆவிகள் அவனாலேயே
ஒவ்வொரு முறையும் பிழியப்படும்,,,,

பிழியப்பட்டு நசுக்கப்பட்டு அவனை
புகழ் உச்சிக்கு கொண்டு சேர்க்கும் ,,,,

அவனை நிழல் போல தொடர்தே வரும் - சீக்கிரமாய் வரும்
முதுமை எனும் சந்தோச - சுவர்க்கம்

முதுமை பணத்திற்கு அடிமை அல்ல ,
விலை கொடுத்து அனுப்பி வைக்க

அது,
அவனையும் பிடிக்கும்
அவன் பேனா விரலையும் பிடிக்கும்

முதுமையும் வெகுநாள்கள் நீடிக்காது

முதுமைக்கும் கொந்தளிக்க தெரியும்
அவன் ஆவியை கொண்டுசெல்ல துடிக்கும்

செல்ல ஆயத்தமான அவைகளில் சில மட்டும்
செல்லாமல் இருந்துவிடுவது உண்டு

அவை பத்திரமாய் ஓட்டிக்கிடக்கும் அவனது காகிதங்களில் ..................

அவை சொல்லாமல் சொல்லும் ---------
"இன்னும் நான் கல்லறை செல்ல மனம் இல்லாமல் - தமிழ் தென்றலே உன்னோடு இருக்கிறேன்,"
என்று ........................

எழுதியவர் : வான்மதிகோபால் (17-May-17, 11:14 am)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 209

மேலே