இதயம் திட்ட மிடுவதில்லை

வண்ணத்துப்பூச்சிகள் பறக்க
திட்டமிடுவதில்லை !
வண்டும் தேன் பருக
திட்ட மிடுவதில்லை !
மலர் மலர
திட்டமிடுவதில்லை!
கதிரவனும் கார்நிலவும்
உதிக்க திட்டமிடுவதில்லை !
தென்றலும் உலவ
திட்டமிடுவதில்லை !
தீயும் சுட
திட்டமிடுவதில்லை !

இதயமும் காதலுக்காய் திட்டமிடுவதில்லை !

இயல்பாய் இடர் இன்றி
காதலை உணர்ந்து கொள்ளும் !
நினைவுகளை அழகாய் சுமந்து கொள்ளும் !

எழுதியவர் : வீர .முத்துப்பாண்டி (17-May-17, 12:59 pm)
பார்வை : 181

மேலே