நீக்கிவிடுங்கள்

நீக்கிவிட்டார்களாம்….
தலைவனை கட்சிலிருந்து,
கொதித்தெழுந்து விட்டான்
தொண்டன்…!

கொழுந்துவிட்டு எரிந்தது பேருந்து
சில உயிர்களுடன்...

கலவரத்தை களை கட்டிவிட்டான்
கல்வீச்சினால்...
போலீசாரும் பதில் சொன்னார்கள்
துப்பாக்கி தோட்டாக்களினால்…
வீழ்ந்தது பதினெட்டு உயிர்கள்...

ஆத்திரம் அடங்கி வீட்டுக்கு வந்தான்
தாய் ஓலமிட்டு காட்டினாள்
எரிந்து போன தங்கை
வீழ்ந்து போன தந்தை
ஊமையாய் உறங்கும் சடலங்களை
ஓலமிட்டு கட்டி அழுதான்.

வானொலியும் கத்தியது
தலைவர் எதிர்கட்சியில்
சேர்ந்துவிட்டார் என்று
நீக்கிவிடுங்கள் எங்கள் பெயர்களை
மனித பிறவியெனும் கட்சிலிருந்து...

****************
சிகுவரா
மே 2001 ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவரா (17-May-17, 8:02 pm)
பார்வை : 264

மேலே