சமயோஜிதக்காரன்

பல வருடங்களுக்கு முன் நாங்கள்
புதிதாக வீடு வாங்கியிருந்தோம்.
அந்த வீட்டிற்கு என்
இரு மகன்களின் பெயரையே
வைக்க நினைத்து அது பற்றி
என் கணவரிடமும்
என் மூத்த மகனிடமும்
பேசி கொண்டிருந்தேன் !!!

இரு மகன்களின் பெயர்கள்
ஸ்ரீனிவாசன் மற்றும் ஸ்ரீராம் !!!
அதனால் "ஸ்ரீ இல்லம் " என
வைக்க முடிவு செய்தேன் !!!

அது வரை எதுவும் பேசாத
என் பெரிய மகன் திடீரென
"ஏன் அம்மா "ஸ்ரீ நிவாஸ்"
என்ற பெயர் நன்றாக
இருக்கிறதல்லவா?
என கேட்டான்

பிறகு அவனே அதற்கு
விளக்கத்தையும் சொன்னான்
"ஸ்ரீ" என்ற சொல்
இருவரது பெயரிலும்
பொதுவாக இருப்பதாகவும்
"நிவாஸ்" என்றால் "இல்லம்"
என்று பொருள்படும்
என கூறினான்.

எங்களுக்கும் அந்த பெயர்
பிடித்து போகவே
அதனையே எங்கள் வீட்டிற்கு
வைத்து விட்டோம் !!!
நாட்கள் கடந்தன ...
எனது இளைய மகன்
கொஞ்சம் பெரியவனாகி
விட்டான் !!!

நாங்கள் நால்வரும்
ஒரு விடுமுறை நாளில்
சாதாரணமாக
பேசிக்கொண்டிருந்தபோது
வீட்டின் பெயர் காரணம்
பற்றி கேட்டான் !!!

நாங்கள் வீடு
கிரஹ பிரவேசம்
செய்யும் பொது
என் பெரிய மகனுக்கு
வயது பதினைந்து !!!

இளைய மகனுக்கு
வயது ஐந்து !!!

அதற்கு என் பெரிய மகன்
சொன்னான்.. அந்த பெயர்
"என்னுடையது" என்றான்..

சட்டென இளையவனின்
முகம் மாறியது ..

நானும், என் கணவரும்
ஒன்றும் புரியாமல்
மூத்தவனிடம் எப்படி?
என்று கேட்டோம் ..



அதற்கு அவன் சொன்னான்
என்னை அனைவரும்
ஸ்ரீநிவாஸ் என்று தான்
அழைக்கிறார்கள்

அதனால் நான் யோசித்தேன்
நீங்களும் மனம் வருந்தக்கூடாது
என் பெயரும் வர வேண்டும்

எனவே தான் இந்த பெயரை
சொன்னேன் என்றான்.

நானும் என் கணவரும்
சொல்வதறியாது
திகைத்து நின்றோம் !!!

எங்களுக்கு ஒரு பக்கம்
எங்கள் பிள்ளையின்
சமயோசித புத்தியை
நினைத்து பெருமை ..

மறு பக்கம் இன்னும்
நாம் அவனை
சிறு பிள்ளை
என்று நினைத்தோமே
என்ற குற்றவுணர்ச்சி !!!

இதோ புகைபடத்தில்
இருப்பவன் தான்
அந்த சமயோஜிதக்காரன் !!!

எழுதியவர் : கவிழகி செல்வி (18-May-17, 1:15 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 79

மேலே