அம்மு குட்டிச் செல்லம்

சிறு குழந்தைகள் புதுமலர்த் தோட்டம்
வசந்தமும் தென்றலும் மகிழ்வாக வீசும்
இனிய நிகழ்வுகள் எப்போதும் நிகழும்
அவர்கள் சிரிப்பே பூக்களாய் மலரும்

வண்ணத்துப் பூச்சிகளும் சங்கீதம் இசைக்கும்
தட்டானும் தேனீயும் நாட்டியம் ஆடும்
வானத்து சூரியனும் தன்வெப்பம் மறக்கும்
மேகமோ மழைத்துளியால் வாழ்வைக் குளிர்விக்கும்

வானவில் வண்ணமாய் வாழ்க்கை இருக்கும்
குயிலும் மயிலும் சேர்ந்து விளையாடும்
மெல்லச் சிரிக்கையில் கொள்ளைபோகும் இதயம்
தத்தி நடக்கையில் மறந்திடுவோம் எதையும்

வாழ்க்கையில் வந்தது வசந்த காலமே
ஓடிடும் மறைந்திடும் துன்ப ஓலமே
முடிவில்லா இக்காலம் எந்நாளும் தொடர்ந்திடும்
ஆனந்த கணங்களுக்காய் நாட்கள்தினம் விடிந்திடும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-May-17, 11:58 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 97

மேலே