ஊஞ்சல்

அழகான பொன்னூஞ்சல் வாழ்க்கை
இதமாக தாலாட்டும் இயற்கை
சுகமாக நாமாடும் போது
மழைத்துளிகள் நம்மீது மோதும்

முன்னேற்றம் சிலநேரம் உண்டு
பின்னேயும் சிலகணங்கள் உண்டு
கலங்காமல் முயற்சித்தால் நமக்கு
மறுபடியும் முன்னேற்றம் உறுதி

முன்சென்றாலும் வேண்டுவது பொறுமை
அகங்காரம் மிகக்கொள்ளல் கொடுமை
புன்சிரிப்பை சொத்தாகக் கொண்டால்
முன்நிற்கும் சுகம்மட்டும் நமக்கு

ஊஞ்சலென்றால் அனைவருக்கும் பிடிக்கும்
குழந்தைகளும் அதிலாடி மகிழும்
சீராக ஆட்டமது தொடர்ந்தால்
பறவையாகி பறந்திடலாம் நாம்தான்

மனமுமொரு ஊஞ்சலெனக் கொள்வோம்
நற்சிந்தனை அதிலமர வைப்போம்
உண்மைக்கு கட்டுப்பட்டு நடப்போம்
செழுமையான வாழ்க்கைக்கே உழைப்போம்

ஊஞ்சலதும் மனமகிழ்ச்சி கொடுக்கும்
நீயூட்டனின் விதிப்படியே நடக்கும்
அச்சமின்றி வாழ்ந்திடுவோம் வாழ்வை
மிச்சம்மீதி வைத்திடாமல் சிரித்தே...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-May-17, 11:59 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : oonjal
பார்வை : 635

மேலே