தாய்மொழி

பல நூற்றாண்டு கண்டதெங்கள் தாய்மொழி
இன்று சிறு காற்றுக்குப் பறந்திடுமா?
பல கற்கண்டு சுவைகள்கொண்ட என்மொழி
இன்று சிறு தேனீக்கு பயந்திடுமா?

எவர்வந்தும் எதைக்கொண்டும் அழித்திட நினைத்தால்
கதறி அழுது காணாமல் போய்விடுமா?
இரும்பான உளிக்கொண்டு தனைத்தானே செதுக்கியின்றும்
பொற்கோவில் சிலைபோலே பவனியாய் வலம்வருமே..

பலமொழிகளின் தாய் பலநூல்களின் பிறப்பிடம்
பலகவிகளின் கடவுள் தரணியாளவந்த தாரகை
சிறுசிறு காற்றென்ன பெரும்புயலையும் சமாளிக்கும்
சிறுசிறு அலைகளென்ன சுனாமியையும் எதிர்த்துநிற்கும்

அந்நியமொழிகள் தமிழர் இல்லங்களில் ஊடுறுவினாலும்
அவரது உள்ளங்களில் என்றென்றும் ஆட்சிசெய்யும்
வில்லன்கள் நூறுபேரென ஆயிரமே வந்தாலும்
அவர்மனம் மாற்றும் தினமாயிரம் கவிகொடுக்கும்

எல்லோருக்கும் மூத்தமொழி இனிக்கின்ற எங்கள்மொழி
எத்தனை வயதானாலும் இளமையான செல்லமொழி
உலகம் இருக்கும்வரைக்கும் எங்கள் தமிழுமிருக்கும்
தமிழ் இல்லையெனில் உலகம் இல்லையெனக்கொள்ளலாம்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (19-May-17, 12:08 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 2927

மேலே