மடை
நீரின் போக்கை கட்டுப்படுத்த போடலாம் மடை
கவிதையின் போக்கை கட்டுப்படுத்த ஏது தடை
நேர்வழி நடக்கத் தடுப்போரின் வார்த்தை உடை
கோடிக் கேள்வி எழஎழத்தானே கிடைக்கிறது ஆயிரம்விடை
வயற்காட்டில் நீரின் வழிகாட்டி இந்த மடை
கவிதைகளை படித்து ரசிக்கத்தானோ இந்தமுகநூல் கடை
முனிவர்கள் தவமிருக்க அவர்தலையில் பாம்பாகச் சடை
கவிதைப் போர் தொடுத்திடவே ஆர்வமாயிந்தப் படை
மடை உயர உயர நீர்வரத்து அதிகமென்போம்
மடை குறையக் குறைய வயற்காடே இல்லையென்போம்
வாய்க்காலும் வரப்புமிப்போ பேச்சில் மட்டும் வாழுது
தாய்ப்போல மண்ணநினைச்ச விவசாயியோ தினம் அழுது
மடை திறந்த வெள்ளம்போல நல்லெண்ணம் பூக்கட்டும்
மனம் நிறைந்த வாழ்த்துப்பாடி இதயங்கள் நிறையட்டும்
விடை தெரியா வாழ்க்கையிலே விடியல்நாளை இருக்கட்டும்
கவிதை படிக்கும் உள்ளங்களில் கனிவுநிரம்பி வழியட்டும்