உல்லாசப் பறவைகள்

விண்ணை நோக்கினேன்
விண்ணில் உள்ளது
பரந்த வானம் அதில்
எல்லைகள் ஏதும் இல்லை
நேச நாடுகள் என்று ஒன்றும் இல்லை
துவேஷ நாடுகள் யாதும் இல்லை
அந்த வான வீதியில் அங்கும் இங்கும்
எங்கும் பறந்து செல்லும் பறவைகளை
சற்றே பார்த்தபின்னே இந்த
பறவைகள் கொடுத்து வைத்த, பிறவிகள்
என்று மனதில் பட்டது அவைகள்
எங்கு சென்றாலும் தட்டி கேட்பார்
யாரும் இலர் ; விசா,பாஸ்போர்ட் தேவை இல்லை;
எல்லைகள் தப்பி தவறி தாண்டிவிட்டால்
இங்கே மண்ணில் அசலூரில்,' உள்ளே'
கிடக்க வேண்டியதுதான் ஓர் கைதியாய்,
யாரறிவார் , ஒற்றன் இவன் என்று
பொய்குற்றம் கூட சாற்றி வாழ்க்கையை
வீணாக்கி விடுவார் அண்டை நாட்டார் ;
வானம்பாடியாய், பாடும் குயிலாய்,கிளியாய்
வைகறையில் கரையும் காகமாய் ,இல்லை
எப்போதும் சுறுசுறுப்பாய் எங்கும்
பறந்து ஓடித்திரியும் குருவியாய் நான்
என் பிறக்கவில்லை என்று தோன்றுகிறது
அத்தனை சுதந்திரம் இப்பறவைகளுக்கு
உண்ண உணவு,உடுக்க உடை இருக்க இடம்
என்று தேடி அலையும் மானிடர்போல்
பறவைகள் என்றும் வருந்துவதில்லையே
இவைகள் சொத்துக்கள் வாங்குவதில்லை
வீணாக சேர்ப்பதும் இல்லை
உல்லாசமாய் வாழ்கின்றன அவை
நம்மைப் பார்த்து நகுகின்றனவோ
நித்தம் நித்தம் வாழ்க்கையில்
எதிர்நீச்சல் போடும் நம்மைப்பார்த்து ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-17, 3:37 pm)
பார்வை : 82

மேலே