கண்ட நாள் முதலாய்-பகுதி-04

..............கண்ட நாள் முதலாய்.............

பகுதி : 04

ஹோட்டலில் இருந்த அனைத்து வகை உணவுகளையும் ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள் பவி.இதே வேறு ஒரு நாளாக இருந்தால் துளசி நம்ம பவியை விட மோசமாக சாப்பிட்டுக் கொண்டிருந்திருப்பாள்.ஆனால் இன்று அவளது மனம் ஏதோ மாயவலைக்குள் மாட்டிக் கொண்டு முழிப்பது போல் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தது.அது ஏனென்று அவளுக்கே புரியாத புதிராக இருந்தது.

துளசியின் இந்த மாற்றத்தை கவனிக்கும் நிலையில் பவி இல்லை.அவள் இருந்த கொலைப் பசிக்கு அவளது கண்களும் கையும் சாப்பாட்டை விட்டு அகலவே இல்லை.அனைத்தையும் ஒரு கட்டு கட்டி விட்டே தலையை நிமிர்த்தி துளசியைப் பார்த்தவள் கொஞ்சம் திகைத்துத் தான் போய்விட்டாள்...

"அட நம்ம துளசியா இது,இவ நம்ம பக்கம் கையை நுழைக்காம இருக்கும் போதே சந்தேகப்பட்டேன்.என்னாச்சு இவளுக்கு..வரும் போது நல்லா தானே இருந்தா.."

"ஏய் துளசி என்று கூப்பிட்டவாறே அவள் முதுகில் ஓங்கி ஒன்று வைத்தாள்.."

அவள் அடித்ததும் ஏதோ கனவுலகத்தில் இருந்து எழும்புபவள் போல் திடுக்கிட்டு முழித்தவள்...."ஏன்டி பிசாசே அடிச்சே??"

"ம்ம்....சும்மா பொழுது போகல,அதான் உன்னை அடிச்சுப் பார்த்தேன்.."

"இப்போ எதுக்கு அந்த முட்டைக்கண்ணைப் போட்டு இப்டி உருட்டுற,நீ ஒழுங்கா இருந்தா நான் ஏன்டி அடிக்கப் போறன்.."

"ஏன் எனக்கென்ன நான் நல்லாத்தானே இருக்கேன்...இதைச் சொல்லும் போதே
அவளது உள் மனம் கேட்டது நீ உண்மையிலேயே நல்லா இருக்கியா என்று"

"எது நல்லாயிருக்கியா??,நான் பார்க்கும் போது ஏதோ பேய் அடிச்ச மாதிரி ஒருத்தி இருந்தாளே,அப்போ அது யாரு??ஏன்டி இப்படி வாய் கூசாம பொய் சொல்லுறாய்,உனக்காக ஓடர் பண்ணிய எல்லாமே அப்படியே இருக்கு,வழமையா என்னோட சாப்பாட்டைக் கூட பிடுங்கித் தின்னுவாய்...இன்னைக்கு உன் சாப்பாட்டைக் கூட மறந்து அப்படி என்ன யோசனை உனக்கு??"

பவி இப்படி நேரடியாகக் கேட்டதும்,அவளுக்கே தெளிவில்லாத ஒன்றை எப்படிக் கூறுவாள் அவளிடம்?மீண்டும் அவள் கனவுலகத்துக்கே செல்ல பவிக்கு இவளை இன்னும் இரண்டு அப்பு அப்பினால் என்னவென்று ஆகிவிட்டது...

"இங்க ஒருத்தி மூச்சு வாங்க கேள்வி கேட்டிட்டு இருக்கா,இவ என்னடானா பகலிலேயே கனவு கண்டிட்டு இருக்கா.."

"துளசி.....என்னடி ஆச்சு உடம்புக்கு ஏதும் பண்ணுதா..."

"ச்சு.....ஒன்னுமில்லைடி....சரி வா கிளம்பலாம்"

"ஒன்னுமில்லாததுக்கா இப்படி மண்டையை போட்டு குழப்பிட்டு இருக்காய்....சரி அதை விடு....முதல நீ சாப்பிடு...அப்புறம் கிளம்பலாம்.."

"இல்லைடி....எனக்கு இப்ப பசிக்கல....இதை பார்சலா எடுத்து வீட்டை கொண்டு போய் சாப்பிட்டுக்கிறேன்....இப்போ கிளம்புவோம்"

"என்னவோ பண்ணித் தொலை,நான் சொன்னா கேட்கவா போற..."

இருவரும் பில்லுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு பார்க்கிங் இருந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினர்.

"ஏய் பவி அவன் உண்மையாவே அழகாய் இருந்தானா??"

"யாரையடி கேக்குற..?"

"அதான்டி அவன்.."

"இப்போ நீ ஏன்டி முறைக்கிற?"

"பின்ன முறைக்காம,ஏன்டி எனக்கு ஆயிரத்தெட்டு அவனைத் தெரியும்...இதில நீ அவன் அவன்னு ஏலம் போட்டா,நான் யார் அந்த அவனு சாத்திரமா பாக்க முடியும்...."

"ஹி.....ஹி...."

"இளிக்காம கேட்டதுக்கு முதல பதில் சொல்லு.."

"சரிடி.....கோபிச்சுக்காதடி செல்லம்...அதான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ஒருத்தன் மேலே மோதினேனே,அவனைத் தான்டி கேட்டேன்.."

"அடி கள்ளி,கதை இப்படி போகுதா?அதான் மேடம் ஹோட்டல்ல பேய் அறைஞ்ச மாதிரி இருந்தீங்களாக்கும்...அது சரி நீதானே அவன் கூட ரொமான்டிக்கா போஸ் எல்லாம் கொடுத்தாய்,அப்புறம் எதுக்கு என்னைக் கேட்குறாய்..."

"சீசீ...போடி....அது ஏதோ தெரியல அந்த நேரம் பார்த்து வெட்கம் வந்து தொலைச்சிருச்சிடி...அவனை நிமிர்ந்து பார்க்க கூட முடியல....அப்படியே ஓடி வந்திட்டேன்..."

இதைக் கேட்டது தான் தாமதம் பவி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

"இப்போ எதுக்குடி சிரிக்கிற...?"

"பின்ன காமெடி சொன்னா சிரிக்க மாட்டாங்களா?வெட்கமா அது கிலோ என்ன விலைனு கேட்கிற உனக்கு எல்லாம் வெட்கம் வந்திச்சுனு சொன்னா சிரிக்காம என்னடி பண்ணுவாங்க..."

"போடி உன்கிட்ட போய் சொன்னன் பாரு,என்னைச் சொல்லனும்...ஆனாலும் துளசிக்கே அது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருந்தது...பவி சொல்வது உண்மை தானே?வெட்கமா அப்படினா என்ன என்று கேட்பவளுக்கு இன்று எப்படி வெட்கம் வந்தது..?"

"அப்போ மோதலில் காதல் வந்திட்டுனு சொல்லு.."

அவனைப் பற்றியே நினைவில் இருந்தவளுக்கு பவி சொன்னது கேட்கவில்லை...அதனால் அவளிடமே என்னடி சொன்னாய்னு கேட்டு வைத்தாள்...."

"சரியாப் போச்சு போ....சொன்னாங்க சுரைக்காய்க்கு உப்பில்லைனு,என்று சொன்னவாறே அவளைப் பார்த்து ஒரு மார்க்கமாகச் சிரித்து வைத்தாள்..."

அவளது மர்மச் சிரிப்பிலிருந்தே என்ன சொல்லியிருப்பாள் என ஊகித்துக் கொண்ட துளசி...

"போடி,நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமில்லை....சும்மா அவன் எப்படி இருப்பானு தெரிஞ்சுக்கலாம்னு கேட்டேன்,அது ஒரு குத்தமா?என மனதை மறைத்து பொய்யுரைத்தவள்...நீ ஒன்னும் சொல்ல வேண்டாம் போ என்றுவிட்டு விறு விறு என நடக்கத் தொடங்கினாள்..."

"சரி சரி...மூக்கை உறிஞ்சாத சொல்லித் தொலையுறேன்...நில்லுடி..."

பவி சொல்வதை கேட்பதற்குத் தயாராக நின்றபடி ஆவலாக அவளது முகத்தை நோக்கினாள் துளசி....

தொடரும்.....

எழுதியவர் : அன்புடன் சகி (20-May-17, 11:30 am)
பார்வை : 709

மேலே