தியாகம்

சிறுகதை
"எல்லாம் முடிந்து விட்டது. பத்து வயது பாலகனை பறி கொடுத்துவிட்டு நிற்கிறாய் நீ. உனக்கு ஆறுதல் சொல்லும் தகுதி எனக்கு இல்லை. ஆனால் நம்முடைய நட்பு என்னை பேச வைக்கிறது." கண்ணீருடன் சொன்னாள் வீணா.

குமரன் பதில் எதுவும் சொல்லவில்லை.

மூளைச் சாவால் இறந்து போன மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தாயே, நீ ஒரு பக்குவப்பட்ட தியாகி. உன்னை என் நண்பனாக பெற்றதற்கு, முற்பிறவியில் நான் தவம் செயதிருக்க வேண்டும். நான் கேட்காமலேயே பல உதவிகளை நீ எனக்கு செயதிருக்கிறாய்."

"உன் மனைவி சங்கீதாவை எங்கே காணவில்லை?" சந்தேகத்துடன் கேட்டாள் வீணா..

"மகனின் இழப்பைத் தாங்கி கொள்ளும் மன நிலையில் அவள் இல்லை" என்றான் குமரன்.

"ஆரவ் படிக்கும் பள்ளியிலிருந்து தலைமை ஆசிரியர் வந்திருந்தார். இனி வருடந்தோறும் ஆரவ் பெயரில் ஒரு மாணவனுக்கு இலவச கல்வி அளிக்கப் போவதாக சொன்னார்" என்றான் குமரன்.

"செத்தும் கொடுத்த சீதக்காதி ஆரவ்" என்றாள் வீணா கலங்கிய கண்களுடன்.

மேற்கொண்டு ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்க டாக்டர் வந்து குமரனை அழைத்துச் சென்றார். வீணா அவனைப் பின் தொடர்ந்தாள்.

எழுதியவர் : ராஜு (20-May-17, 3:15 pm)
சேர்த்தது : C.B.Raju
Tanglish : thiyaagam
பார்வை : 2030

மேலே