கோலம்

இரவு நேர வானில்
இட்ட நட்சத்திர புள்ளிகளை
கோடு போட்டு இணைத்து
கோலம் போட
குதித்து வருகிறது
எங்கோயோ இருந்து
எரிந்து விழும் ஒரு
எரி நட்சத்திரம்

எழுதியவர் : கோ. கணபதி. (21-May-17, 9:14 am)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : kolam
பார்வை : 43

மேலே