அன்பே நம்மால் அறியப்படாத உலகம்

உலகம், உலகம், நமது உலகம்...
இங்கு மனிதர்களால் படைக்கப்பட்ட ஆயிரம் பல்கலைக்கழகம்...
அவற்றாலும் தடுக்க முடியவில்லை மனிதர்களிடையே ஏற்படும் கலகம்...
பணமிருந்தால் பட்டங்களோடு நெற்றியில் இடும் திலகம்...
இல்லையெனில் மிதித்து நொறுக்கி, தொண்டப்படுவோம் நிலகமாய்...

என்னடா உலகம் இது?
இங்கு வாழ்வதைவிட கானகமே சென்றுவிடலாமே என்று தோன்றிடவே,
நிலகத்தின் மீதிருந்து, நிலகத்தின் வளத்தையெல்லாம் கொள்ளையிட்டு நன்றியகத்திலின்றி,
ஆடம்பரமே உலகமென்று தேடிடும் மானிட ஜென்மங்களை வெறுக்கிறேன், கொடிய விஷம் கொண்டே உயிர் பறிக்கும் விலங்குகளாய் விளங்குவதாலே...

பூவின் இதழ்களைப் போல் மென்மையாக தோற்றம் தந்தாலும் உள்ளிருந்து வெளிப்படும் வன்மம் உணர்ந்தாலே துன்பம் நீங்குமே...
பகுத்தறிவும் வெளிப்படுமே...

அன்பில் நிறைந்து, அன்பில் திளைத்து, அன்பாலே திலகமிட்டு,
அன்பே அறிவின் பல்கலைக்கழகமாகி,
அன்பை உணர்ந்து மதித்தலே பட்டமென்றாகி,
அன்பே உலகமென்று வாழும் வாழ்விலே என்றுமே அன்பே நிரந்தரமென்றாகி,
எங்கும் நிரம்பி அகிலத்தை மூழ்கடிக்கிறது அழிவில்லா அன்பு.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (21-May-17, 6:21 pm)
பார்வை : 381

மேலே