சங்கீத மழையில்

அழகுக் குயிலின்
சங்கீத மழையில்
மரத்தின் கிளைகளில்
ரோலர்-கோஸ்டர்
போகும் அணில் கூட்டத்தின்
சத்தம் ஒரு சுகம்

மரத்தில் படர்ந்த
கொடிகளில் அழகாக
ஊஞ்சலாடி உல்லாசம்
கூட்டும் அணில்

அதன் அருகில்
தங்களின் விருந்தினர் மாளிகை
அமைத்துக் கொண்ட
வெளிநாட்டுப் பறவைகள் காட்டும்
பலவித தாள இசை கச்சேரி சுகம்

என் பார்வை பதிவில் கூட
சிக்காமல் பறந்துவிடும்
கிளிக்கூட்டம்.......

கணீர் குரலுக்கு நானே
சொந்தம் என எங்கிருந்தோ
வரும் பெயர் அறியா பறவை

நீண்டு கொண்டே செல்கிறது
இவைகளின் பட்டியல்
இன்றும் வியக்கிறேன்
அன்றும் ரசித்தேன்
என்றும் மகிழ்வேன்....

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (21-May-17, 8:07 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : sankeetha mazhaiyil
பார்வை : 116

மேலே