கைதா - கனவிலும் இல்லை

அண்ணே திருட்டுத் தொழில்ல அஞ்சு வருச அனுபவம் இருக்குதுன்னு சொன்னீங்க. ஆனா இதுவரைக்கும் எந்த வழக்கிலும் மாட்டாம இருக்கறீங்க. அந்த ரகசியத்தை வெவரமா சொல்லுங்கண்ணே.
😊😊😊😊😊
ஒரு செய்திதாண்டா என்ன திருடனா மாத்துச்சு.
😊😊😊😊😊😊
நீங்க என்ன சொல்லறீங்க? செய்தியைப் படிச்சுட்டு திருட ஆரம்பிச்சீங்களா? வெவரமா சொல்லுங்கண்ணே. நான் உங்ககிட்ட தொழில் கத்துக்க வந்திருக்கிறேன். கொஞ்சம் வெவரமா சொல்லுங்கண்ணே.
😊😊😊😊
தம்பி செங்கண்ணா,...
😊😊😊😊
சொல்லுங்கண்ணே.
😊😊😊😊
அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நாளிதழ்ல ஒரு செய்தியப் படிச்சேன். சில அரசியல்வாதிகள் தேர்தல்ல செயிக்கறதுக்கும் எதிரிகளால தங்களுக்கு கெட்டது நடக்கக்கூடாது என்பதற்கும் 'சத்ரு சம்ஹார யாகம்' செய்யறாங்கன்னு தெரிஞ்சிட்டேன். லஞ்சம் வாங்கறவங்க, கடத்தல்காரங்க, ஊழல் செய்யறவங்க எல்லாம் கடவுள் நம்பிக்கை அளவுக்கு மீறி இருப்பதாக நடிக்கறாங்கடா. வழிபாட்டுத் தலங்களுக்கு அடிக்கடி போய் பூசை புனஸ்காரம் செஞ்சு காணிக்கை செலுத்திட்டு வர்றாங்க. சாத்திரம் சடங்க செய்யவும் தவறமாட்டாங்க. இதெல்லாம்தாண்டா அவுங்க வெற்றியின் ரகசியம். இந்த நடைமுறை உண்மைகளைத் தெரிஞ்ஙதுக்கப்பறந்தா நானும் திருட்டுத் தொழில தொடங்கினேன். நல்லா செல்வாக்கா இருக்கறண்டா.
இதுவரைக்கும் எம்மேல எந்த வழக்கும் இல்லை.
😊😊😊😊😊
அண்ணே, அண்ணே நீங்க சொன்னத கேட்டதும் எனக்குத் தொழில் நம்பிக்கை வந்திருச்சண்ணே.
😊😊😊😊😊
சரிடா செங்கண்ணா. இந்த நிமிசத்தில இருந்து நான் உன்னோட தொழில் குரு. கால்ல விழுந்து ஆசி வாங்கிக்கடா. (செங்கண்ணன் காலில் விழ) வாழ்க. கைதாகாத திருடனா வாழ்நாள் முழுவதும் தொழில் செய்ய எந் தம்பி சீடன் செங்கண்ணனை வாழ்த்துகிறேன்.
😊😊😊😊😊
(கண்ணீர் மல்க) ரொம்ப நன்றிங்க அண்ணே. உங்க பேரக் காப்பத்துவேங்கற நம்பிக்கை எனக்கு இருக்குதண்ணே.

எழுதியவர் : மலர் (21-May-17, 8:21 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 181

மேலே