அவள் மட்டுமே வேண்டும்

அமெரிக்கா தேசமே !
நீ எனக்களித்த
பிரஜா உரிமை
எனக்கு வேண்டாம்..

இந்தியா தேசமே!
என்னை கெளரவித்து
நீ வழங்கப் போகும்
பாரத ரத்னா விருதும்
வேண்டாம் !

நாசாவே!
செவ்வாய்க்கு என்னை
அழைத்து செல்வதாய்
இருந்த பயணமும்
வேண்டாம்!

ஒஸ்கார் விருதுக் குழுவே!
நீங்கள் எனக்களிக்க விரும்பும்
ஒஸ்கார் விருதும்
வேண்டாம்!

கின்னஸ் புத்தகமே !
உன்னில்
என் பெயரை
பதியவும்
வேண்டாம்!


ஒலிம்பிக் கமிட்டியே!
உங்கள்
தங்கப் பதக்கத்தையும்
எனக்கு சூட்ட
வேண்டாம் !..

நோபல் பரிசுக் குழுவே!
உங்கள் நோபல்
பரிசு கூட
எனக்கு வேண்டவே
வேண்டாம் !

உலகமே!
பிரிந்து போன
என் காதலியை மட்டும்
என்னிடம்
சேர்த்து விடுங்கள்!


இப்படிக்கு ,
மதனி உவைஸ்

எழுதியவர் : மதனி உவைஸ் (22-May-17, 11:24 am)
சேர்த்தது : Mohamed Uwais1
பார்வை : 191

மேலே