தவியாய் தவிக்கிறேன் என் காதல் சொல்ல முடியாமல்

சொல்ல துடிக்கும் தருணத்தில்
சொல்லாமல் சென்றுவிடுவதும் சுகமே

மூச்சு முட்டி நிற்கிறேன் நீ
என்னை மோதாமல் செல்லுகையில்

பேச நினைத்தும் தவிர்க்கிறேன் நீ
என்னிடம் பேசாமல் செல்லுகையில்

தொட நினைத்தும் தொடாமல்
அழ நினைத்தும் அழாமல் ..................................

தவியாய் தவிக்கிறேன்
என் காதல் சொல்ல முடியாமல் .............

எழுதியவர் : வான்மதிகோபால் (22-May-17, 6:15 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
பார்வை : 301

மேலே