நடுவண் அரசு நடத்தும் கட்சி

மோடி அவர்கள் தமிழகத்தில் அவரது கட்சி காலூன்ற அல்லது ஆட்சிக்கு வர...
முதலில் அய்யா விசயகாந்த் அவர்களுக்கு முத்தம் கொடுத்து வரவேற்று அணி சேர்த்து இருவரும் தேர்தலில் போட்டியிட்டனர்... ஒரு சீட்டு கிடைத்தது.

OPS அவர்களை அரசியலில் பாதை மாற்றச்செய்து ஏதாவது செய்ய முயற்சி செய்தார்... எதுவும் நடக்கவில்லை.

அய்யா கமல் அவர்களை அரசியலில் முன்னிறுத்த முயற்சி செய்தார், ஆனால் அவரோ பெரியார் புகழ் பாட, இது சரிப்படாது என்று பின் வாங்கியது நடுவண் அரசு நடத்தும் கட்சி...

கடைசியில் இரசினிகாந்து அவர்களை நூல் விட்டு பேசி செய்து, அவரை அரசியலில் நுழைய வைக்க முற்படுகிறார்கள்.
இரசினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதால் அவருக்கு ஏற்படப்போகும் இழப்புகள் மிகுதி. அவர் கடைசியில் பெயர், புகழ் தொலைத்து விட்டு மன அமைதி இழப்பார்.
சேர்த்த பணம் கண்டிப்பாக இழப்பார்.
யாரோ எதற்கோ வைத்த பொறியில் இவர் சிக்கிடுவாரோ என்ற ஆதங்கத்தில் மட்டுமே இதை எழுதினேன். அவரை கண்டிப்பாக குறைத்து சொல்லவே இல்லை. தமிழராய் பிறந்தவர், அகவு உயர்ந்தவருக்கு மதிப்பளிக்கவே வேண்டும்... அது தான் நம் பண்பாடு.

எழுதியவர் : (22-May-17, 7:21 pm)
சேர்த்தது : yazhmani
பார்வை : 114

மேலே