ஒருபக்க காதல் கதை-26

முகத்தில் சிறு சோகமும் கையில் அவள் கொடுத்தக் காகிதமுமாய் வீற்றிருந்தான் வீட்டு மாடியில்

அவனின் நண்பன்: என்னடா எப்பவும் வெளில வரச்சொல்லுவ இன்னிக்கி வீட்டுக்குலாம் ?

அவன்: இல்லடா சும்மாதான்

அவனின் நண்பன்: ஏதாவது வாய்டிச்சு போற மாதிரி பதில்சொல்லுவன்னு நெனச்சேன்

அவன்: கொஞ்ச நேரம் மனசும் பேச முயற்சி செய்யும்

அவனின் நண்பன் : அதான பாத்தேன்..சரி அத விடு..அவ சங்கதி என்னாச்சி..உன் கத ரொம்ப போர் அடிக்குது டா ட்விஸ்ட்டே இல்ல, சீக்கிரம் கிளைமாக்ஸ் வா அதுவாது நல்லா இருக்கானு பாப்போம்

அவன்: அவ ஆம்பளையா மாறப்போரா

அவனின் நண்பன் : ட்விஸ்டு நல்லா இருக்கு..நீ உண்மைய சொல்லு

அவன்: Hysterectomy ன்னு ஏதோ ஆப்பரேஷனாம் அது பண்ணி ஆம்பளையா மாறப்போரா(எனக்கூறி கையிலிருந்த ரிபோர்ட்ஸை விசிறியடித்தான்)

அவனின் நண்பன்: ஓத்தா என்னடா இப்புடி சொல்ற , நீ ஏதும் கேக்கலையா ?..

அவன்: என்ன கேக்க சொல்ற? அவ விருப்பம், நான் யாரு அதுல...

அவனின் நண்பன்: நான் அவகிட்ட பேசிப்பாக்குறேன்

அவன்: பேசி?..அதுக்கும் மேல ?..உனக்கு இதெல்லாம் செட் ஆகல விட்றா

அவனின் நண்பன்: நீ இப்ப ஆத்திரத்துல இருக்க இப்ப தூங்கு நாளைக்கி பேசுவோம்..அதுதான் மைண்ட் டைவர்ட் பண்ணும்(எனக்கூறி விடைபெற்றான்)

விடைபெற்ற சிலநிமிடங்களில் அவனை தொலைபேசியில் அழைத்து :

அவனின் நண்பன்: டேய் நான் Hysterectomy னு கூகிள் பண்ணி பாத்தேன், கருப்பை எடுக்குறதுன்னு தான் போட்ருக்கு

கூறியவுடன் கால் கட் செய்துவிட்டு சிதறிய காகிதங்களை ஒருசேர்த்து படிதான், அதில் உள்ள வார்த்தைகளை கூகிள் செய்தபின்பே அவன் முகத்தில் ஓர் ஆச்சர்யம் தொத்திக்கொண்டது

அவன்: டேய் அவ Hysterectomy பண்றது ட்ரான்ஸ்பிளண்டஷன் பண்றதுக்காகன்னு போட்ருக்கு

அவனின் நண்பன் : அப்டினா?..ட்ரான்ஸ்ஜெண்டர் ஆக போறாளா ?

அவன்: அவளுடைய கருப்பையை மாற்று அறுவை சிகிச்சைக்கு தானமா குடுக்குறா டா...

எழுதியவர் : வெங்கடேஷ் நாகராஜன் (22-May-17, 7:55 pm)
சேர்த்தது : வெங்கடேஷ்
பார்வை : 378

மேலே