கண்மணியே வா வெளியே

திங்கள் மிச்சம் இரண்டு இருக்க
உயிர் வலி உச்சம் மிஞ்சுதடி,
நீ உள்ள உருவும் உயிரினில
என் உதிரம் கொஞ்சம் வழியுதடி..
ஏழாம் திங்கள் நீ கேட்க
சீமந்த வளவி நா போட்டேன்,
போட்ட வளவி இறங்கும் முன்ன
பொசகெட்டவ எனும் வசை கேட்டேன்..
கோடி கனா கண்டேன் புள்ள
உன சுமையா நினைக்க எண்ணமில்ல,
கனவே உன்ன காணும் மட்டும்
நா களித்து உண்ண திண்ணமில்ல..
திங்கள் பல அழுதேன் நானா
தீதோ நன்றோ உனக்கது ஏன்டி,
அழுத ஓசை கேட்க வேணா
வளவி கொஞ்ச உவந்து போடி..
சொந்த பந்தம் ஏய்ச்சி போக
நா சொகந்தான் ஒன்னு கண்டல்ஏது,
என்ஆதி அந்தம் நீயென ஆக
ஒருகளிச்சி படுக்க மறுத்தல் ஏது..
சிறுக்கி இவ சுமந்த புள்ள
சீக்கிரம் உன பாக்க வேணும்,
அறுத்தல் இன்றி வாடி மெல்ல
இன்னும் பலகூறி அழதான் வேணும்..
ராத்திரி உதிக்கும் மதியை போல
என் வழி நீயும் மலர்ந்து வரனும்,
உதித்த நிலா உதிர்த்தல் போல
பத்தாம்நாள் உன்கொடி உலர்ந்து போனும்..

$வினோ...

எழுதியவர் : வினோ.... (23-May-17, 7:43 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 226

மேலே