அம்மா

என் முகத்தினை பார்க்கும் முன்பே என்மேல் முத்தம் பதித்தது என் அன்னையின் இதழ்கள் தான். என் இதழும் முதன் முதலில் ஒன்றாக இனைந்தது அவளை அம்மா என்று அழைத்தபோதுதான்.

நடை என்பதை நானும் பழகினேன் அவள் பார்க்க ஆவள் கொண்டபோது. அவளின் கடைக்கண் பார்வைக்கு எட்டவில்லை என்றால் முதலில் பதட்டம் கொள்வது என்மேல் பாசம் வைத்த என் அன்னை மட்டும் தான். அதனால் தான் இன்றும் அவள் பார்வைகளை விட்டு விலகாமல் என் அன்னையின் கண்களாகவே வாழ்ந்து வருகின்றேன்.

ஆயிரம் உயிர்கள் ஒன்றாக இருக்கும் போதும் என் அம்மாவின் உயிர் முழுவதும் என்மேல் மட்டும் தான் இருக்கும். அதனால் தான் அவள் என் எழுத்துகளுக்கும் உயிர் எழுத்தாக இருக்கின்றாள்.


அன்னை அவளின் மடியில் தலைசாயும் போதுதான் சில உயிர்கள் தலைக்கனம் என்பதை மறக்கின்றது. எந்நிலை என்பதை மறந்தும் ஏதோ ஒன்றை கட்டிப்போட வைக்கின்றது என் தலைமுடியை கோதிவிடும் என் அன்னையில் விரல்கள்.

என் உடல்களில் வியர்வை துளிகளை கண்டால் என் அன்னை அவளின் விழிகளில் கண்ணீர் துளிகள் தோன்றிவிடுகின்றது அவளை அறியாமல். அதனால் தான் இன்றும் வணங்குகின்றேன் அம்மாவிற்க்கு!. என்றுமே தலைவணங்குவேன் என் அம்மாவிற்க்கு மட்டும்.
அன்னையை மதிப்போம்
அன்னையை போற்றுவோம்...
................................................

அனைத்து அன்னையர்களுக்கும் சமர்பனம்

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (23-May-17, 11:00 am)
Tanglish : amma
பார்வை : 22102

மேலே