அன்பும் வலிக்கிறது

செய்த தவறுக்காக
தண்டிக்காத தந்தையின்
நேசப் புன்னகை.,

வெட்டியாய்ச் சுற்றும் எனக்கு
வேலைக்குப் போகும்
அவசரத்திலும் சட்டைப்பையில்
அண்ணன் வைத்துச் செல்லும்
கைச்செலவு பணம்.,

விசனப்படுவேன் என்பதற்காக-தான்
விரும்பிய பொருளைக்
கேட்கத் தங்கை
காட்டும் தயக்கம்.,

என்ன செஞ்சாலும்
செய்யாமல் போனாலும்
ஒரு வாய் சாப்பிட்டு
போயேன்டா எனும்
தாயின் பரிவு.,

சவுக்கடிகள் தான்
அன்பும் வலிக்கிறது..

எழுதியவர் : சுரேஷ் சிதம்பரம் (23-May-17, 1:29 pm)
Tanglish : anbin vali
பார்வை : 111

மேலே