இயற்கையில் இரக்கம்,பாசம்

துள்ளி ஓடும் பிறந்த பசுவின் கன்று
தன தாயின் மடியை நோக்கி பாயுது
பசியெடுக்க, பால் உண்ண;ஆனந்தம்
அடையுது தாய்ப்பசுவும்

கூட்டில் காத்து கிடக்கும் குஞ்சுகளுக்கு
தன அலகில் ஏந்தி செல்கிறது தாய்ப் பறவை
இதோ கூட்டை அடைந்தபின் ஊட்டுது
எத்தனை நேர்த்தியாய் ஊட்டுது குஞ்சுகளுக்கு

நெஞ்சில் ஈரமில்லா பாயும் புலியும்
பிறந்த தன குட்டிகளுக்கு இறை தேடிவந்து
அன்பாய் பாசமாய் ஊட்டிவிடுவதை
நிழல் படத்தில் பார்த்தாலும் அது
உண்மை நிகழ்ச்சி மனதில் தாக்கம் ஏற்படுத்தியது
இராக்கதற்கும் நெஞ்சு உண்டு போலும் !
அன்று தன ஆருயிர் மகன் இந்திரஜித்து
வன் போரில் உயிர்துறக்க உலகே இருண்டதுபோல்
கண் கலங்கினான் க்ரூர அரக்கன் இலங்கேசன் !

அன்று முகலாய மன்னன் பாபர் மகன் ஹுமாயுன்

உயிருக்காக போராடி பெருந்துயிலில் வீழ்ந்தபோது
' இறைவா என் உயிரை எடுத்துக்கொள் என்
மகன் ஹுமாயுன் உயிரை காப்பாற்று' என்று
மனமார வேண்ட, பாபர் மாண்டான் ஹுமாயுன்
புனர்ஜென்மம் பெற்றான் -இது சரித்திர நிகழ்ச்சி
மன்னன் பாபர் இலங்கேசன் போல் இரக்கமில்லா
போர்வீரன் எதிரிகளுக்கு !

இப்படி எத்தனையோ நிகழ்ச்சிகள்
நடப்பவை, நடந்தவை நம்முன்னே
இறைவன் தந்த இரக்கம், பாசம்
ஆகிய நர்குணங்களை சித்தரிக்க
இவற்றை மனதில் கொள்வோமேயால்
வன்மம் நம்மை என்றும் அண்டிவிடாது
இரக்கமும், பாசமும் நம் மனதில்
நிரம்பி வழியும் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-May-17, 4:22 pm)
பார்வை : 295

மேலே