வலியின் விம்பம்

வலியின் விம்பம்
***********
உணர முடியாத காற்றைப்போல்
உள்ளத்தை வதைக்கும் விம்பம்....

வலியின் விம்பம்,

தெருவோரப்பூக்களின் மேல்
சாக்கடை , நந்தவனம் சுமக்கிறது
பனித்துளிகளை...

ஆணிவேர் அருந்தாலும்
நிமிர்ந்து நிற்கவேண்டும்
ஆசைகளை புதைத்து அதன் மேலே...

தொலை தூர வார்த்தைகளை கேட்க
மனசு தவிக்கும்,
எதிரொலியாய் இசைக்கும்
வலியின் விம்பம்....

உயிரைத்ததுண்டுதுண்டாக்கி
உறவைத்தேடுகிறது பணம்,
உதிர்ந்த இல்லை என்றே
உரம் போடுகிறது அந்த மனம்...

மென்மையான கண்ணீரை
தனிமை சுமக்கிறது.
தனிமைக்கு சுமையாய் திணிக்கிறது
வலியின் விம்பம்..

எதைக்கொண்டு வந்தேன் என்றால்
"வலி " வலிவந்த வழியைத்தேடுகிறேன்.
இழப்புக்கள் மட்டுமே
நிரம்பியிருக்கிறது அங்கே....

உயிரின் வலி
கண்ணுக்குத்தெரிவதில்லை -
வழியை உணர்கிறது உயிர்...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (23-May-17, 6:08 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 226

மேலே